கடைசி நேரத்தில் கல்தா கொடுத்த ஹரீஷ் சால்வே- விக்கெட்டை வீழ்த்திய தினகரன் ஸ்லீப்பர் செல்கள்!
தேர்தல் ஆணையத்தில் திடீரென ஆஜராக முடியாது என மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கைவித்தது ஓபிஎஸ் அணியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
டெல்லி: தேர்தல் ஆணையத்தில் தங்களுக்காக ஆஜராவதாக உறுதியளித்திருந்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே திடீரென கைவிரித்துவிட ஓபிஎஸ் அணி கடும் அதிர்ச்சியடைந்து போனதாம். இதையடுத்தே எஸ். வைத்தியநாதன், குருகிருஷ்ணமூர்த்தி டீமை களமிறக்கியதாம் ஓபிஎஸ் அணி.
தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி சார்பாக மாஜி சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே, சசிகலா சார்பில் மற்றொரு மாஜி சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் உள்ளிட்டோர் ஆஜராக உள்ளனர். இதனால் தேர்தல் ஆணையத்தில் அனல் பறக்கும் வாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

சசி வக்கீல்கள்
ஆனால் ஓபிஎஸ் அணி சார்பாக எஸ். வைத்தியநாதன், குருகிருஷ்ணமூர்த்தி மற்றும் மனோஜ் பாண்டியன் மட்டுமே ஆஜராகினர். அதே நேரத்தில் சசிகலா அணியின் சார்பில் மோகன் பராசரன், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் ஆஜராக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹரீஷ் சால்வே வராமலேயே விவாதங்களும் முன்வைக்கப்பட்டன.

ஹரீஷ் சால்வே ஆஜராகவில்லை
ஹரீஷ் சால்வே ஏன் வரவில்லை என ஓபிஎஸ் அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம்... கடந்த சில நாட்களுக்கு முன்னரே ஹரீஷ் சால்வே தம்மால் ஆஜராக முடியாது என கைவிரித்துவிட்டாராம். டிடிவி தினகரனால் களமிறக்கப்பட்ட ஸ்லீப்பர் செல்களின் கைங்கரியத்தில்தான் ஹரீஷ் சால்வே ஆஜராகவில்லையாம்.

சேகர் ரெட்டி ஏற்பாடு
இதனால் கடுமையாக அதிர்ந்து போனதாம் ஓபிஎஸ் தரப்பு. அப்போதுதான் ஜாமீனில் வெளிவந்திருந்த ஓபிஎஸ்-ன் நெருங்கிய நண்பர் சேகர் ரெட்டிதான் எஸ். வைத்தியநாதன், குருகிருஷ்ணமூர்த்தியை அனுப்பி வைப்பதாக சொன்னாராம். இதையடுத்தே வைத்தியநாதனும் குருகிருஷ்ணமூர்த்தியும் இன்று டெல்லியில் ஆஜராகி வாதாடினராம்.

முடங்கினாலே போதும்
இரட்டை இலை கிடைக்காவிட்டாலும் சசிகலா அணிக்கு போகாமல் முடங்கினாலே போதும் என்கிற மனநிலையில்தான் தற்போது இருக்கிறதாம் ஓபிஎஸ் அணி. அப்படி செய்தாலே தங்களுக்கு பெரும் வெற்றி என்கிறது ஓபிஎஸ்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications