வரதட்சணைக் கொடுமையால் சாப்ட்வேர் எஞ்சினியர் மனைவி தற்கொலை - கொலை என குற்றம் சாட்டும் பெற்றோர்
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் குக்கட்பாலியில் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவரின் மனைவி அவர்களது வீட்டில் இருந்து மர்மமான முறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மோகன் ரெட்டி என்னும் அந்த எஞ்சினியர் மனைவி பிரசன்னா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், பெண்ணின் பெற்றோரோ கழுத்தை நெறித்து பிரசன்னா கொல்லப்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
கர்னூலைச் சேர்ந்த இந்தத் தம்பதிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. ஒன்றரை வயதான குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் வரதட்சணைக் கொடுமையால் பிரசன்னா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று குக்கட்பாலி போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பிரசன்னாவின் தந்தை, மோகனும், அவரது தாயாரும் இணைந்து மேலும் வரதட்சிணை கேட்டு தனது மகளை கொடுமை படுத்தியதாகவும், அதனால் அவரைக் கொலை செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரசன்னாவை, மோகன் அடித்து, துன்புறுத்தியதாலே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு முன்னர் சாப்ட்வேர் எஞ்சினியராக இருந்த பிரசன்னா, திருமணத்திற்கு பின்னர் வேலையை விட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications