தொழில் நுட்ப கோளாறா.. மனித தவறா? ஒரே இடத்தில் 3 ரயில்கள் விபத்தில் சிக்கியது எப்படி? எழும் கேள்விகள்
புவனேஷ்வர்: சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா அதிவிரைவு ரயில், சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் ஒடிசாவில் ஒரே இடத்தில் சில நிமிட இடைவெளிக்குள் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்து நடைபெற்றதற்கு தொழில் நுட்ப கோளாறா அல்லது மனித தவறுகளா? என பல்வேறு கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்தபோது விபத்தில் சிக்கியது. ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம் புரண்டு கவிழ்ந்தது.
சற்று நேரத்தில், அந்த வழியாக வந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயில், கவிழ்ந்து கிடந்த கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதியுள்ளது. இதில் ஹவுரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு சரிந்தன. இந்த 2 பயணிகள் ரயிலுடன், மூன்றாவதாக சரக்கு ரயில் ஒன்றும் விபத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த கோர விபத்தில் ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்து கிடைந்தது.

தொழில் நுட்ப கோளாறா?: ரயிலில் பயணம் செய்த பயணிகள் விபத்தில் சிக்கி அபயக்குரல் எழுப்பினர். நேற்று இரவு 6.50 மணியில் இருந்து 7.10 க்குள் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ரயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி உருக்குலைந்து சிதைந்து கிடந்தன. இந்த இடிபாடுகளுக்குள் இருந்து படுகாயத்துடனும் பயணிகள் பலர் மீட்கப்பட்டுள்ளனர்.
சடலங்களும் சிதைந்த நிலையில் கிடந்தன. 230க்கும் மேற்பட்டோர் ரயில் விபத்தில் பலியானதாகவும் 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தற்போது நடைபெற்று மறு சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக சில கேள்விகளும் எழுந்துள்ளன.
அதாவது, சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த அதே ரயில் வழித்தடத்தில் கோரமண்டல் ரயில் சென்றது எப்படி என்ற கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது. இது தொழில் நுட்ப கோளாறா? அல்லது மனித தவறால் நடந்ததா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. சிக்னல் தவறு காரணமாக இந்த நிகழ்வு ஏற்பட்டு இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.
கவச் சிஸ்டம் இல்லை: ரயில்வேயில் விபத்துக்களை முன்கூட்டியே தடுக்கும் விதமாக கவச் என்ற பாதுகாப்பு அம்சம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஒரு ரயில் சிக்னல் ஜம்பிங் செய்தால் உடனடியாக அலார்ட் செய்யும். அதேபோல், அதே தண்டவாளத்தில் மற்றொரு ரயில் வந்தால் உடனடியாக ஒட்டுநருக்கு அலார்ட் செய்யும்.
அது மட்டும் இன்றி பிரேக் கட்டுப்பாட்டையும் தானே எடுத்துக் கொண்டு ரயிலையும் தானாக நிறுத்தி விடும். ஆனால் விபத்து நடைபெற்ற இந்த வழித்தடத்தில் கவச் பாதுகாப்பு அம்சம் செயல்பாட்டில் இல்லை. ஒருவேளை கவச் பாதுகாப்பு அம்சம் இருந்து இருந்தால் இத்தகைய கோர விபத்து ஏற்படாமல் தவிர்த்து இருக்க முடியும்.
கவச் என்றால் என்ன?: கவச் (Kavach) என்பது இந்திய ரயில்வேயின் தானியங்கி ரயில் பாதுகாப்பு கருவியாகும். இது முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தை ரயில்வேயின் வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான ஆர்டிஎஸ்ஓ உருவாக்கியுள்ளது.
இது கடந்த ஆண்டு செகந்திராபாத் (ஹைதராபாத்) ரயில் நிலையத்தில் சோதனையும் செய்யப்பட்டது. இதற்காக இயக்கப்பட்ட இரு ரயில்களில் ஒன்றில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும், மற்றொரு ரயிலில் ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. திரிபாதியும் பயணம் செய்தும் காட்டினார்கள்.
ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிர் திசையில் வந்தால் சுமார் 400 மீட்டருக்கு முன்னதாகவே கவாச் கருவி 2 ரயில்களின் என்ஜின்களின் செயல்பாட்டையும் முடக்கி வியக்க வைத்தது. அதேபோல், ரெட் சிக்னல் தாண்டி ரயில் ஓட்டுநர் சென்றால் கவாச் உதவியால் ரயில் என்ஜினின் செயல்பாடு முடக்கப்பட்டது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications