தெலுங்கானா: பாஜக, தெலுங்கு தேசம் டூ காங்.. கேசிஆரின் 'நம்பியாராக’ உருவெடுத்த ரேவந்த் ரெட்டி யார்?
ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இருக்கிறதா? என்பது சட்டசபை தேர்தல் அறிவிப்பதற்கு முந்தைய நிலைமை. இப்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்கின்றன தேர்தல் கருத்து கணிப்புகள்.
ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலம் என்பது காங்கிரஸ் செல்வாக்கு பெற்ற மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. ஆந்திராவில் என்.டி.ஆரின் தெலுங்கு தேசம் விஸ்வரூபம் எடுத்திருந்த போதும் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உயிர்ப்புடனும் வலிமையுடனும் இருந்தது.

ஆந்திராவில் காங்கிரஸ்: ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்டு ஆந்திரா, தெலுங்கானா இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் காங்கிரஸ் கட்சியை இந்த மாநிலங்களில் தேடும் நிலைமைதான். ஆந்திராவில் காங்கிரஸின் முகமாக இருந்த ஒய்.எஸ்.ராஜசேக ரெட்டியை ஓரம்கட்டியது, அவரது மறைவுக்கு பின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை காலி செய்து தனிக்கட்சி தொடங்க வைத்தது ஆகியவை ஆந்திராவில் காங்கிரஸை இல்லாமல் செய்துவிட்டது. தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் இன்றைய பிஆர்எஸ் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்ததும் காங்கிரஸின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி விட்டது.
தெலுங்கானா தேர்தல் நிலவரம்: 2014-ம் ஆண்டு தேர்தலில் டிஆர்எஸ் (பிஆர்எஸ்) 63; காங்கிரஸ் 21; தெலுங்குதேசம் 15 இடங்களில் வென்றன. 2018 தேர்தலில் பிஆர் எஸ் கட்சி மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 88 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸுக்கு வெறும் 19 இடங்கள்தான் கிடைத்தன. தற்போதைய தேர்தலில் காங்கிரஸ் விஸ்வரூபம் எடுத்து ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்கின்றன சில கருத்து கணிப்புகள். இந்த விஸ்வரூபத்தை காங்கிரஸ் கட்சியினரே எ திர்பார்க்காத ஒன்றுதான். தெலுங்கானா குறித்து டிவி விவாதம் ஒன்றில் பேசிய மூத்த தமிழக காங்கிரஸ் தலைவர் வேலுச்சாமி, அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தேட வேண்டிய நிலைமைதான் இருந்தது. இப்போது தலைகீழாக மாறி இருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
முதல்வர் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி: தெலுங்கானாவில் காங்கிரஸின் இந்த அசுர வளர்ச்சியின் கர்த்தாவாக ரேவந்த் ரெட்டி பார்க்கப்படுகிறார். ரேவந்த் ரெட்டி.. தெலுங்கானா காங்கிரஸ் எம்.பி. இந்த தேர்தலில் முதல்வர் சந்திரசேகர ராவை எதிர்த்து கமரெட்டி தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கோடங்கல் தொகுதி வேட்பாளராகவும் ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டிருந்தார். தெலுங்கானா தேர்தலில் முதல்வர் சந்திரசேக ராவைப் போல 2 தொகுதிகளில் களம் காணுகிறார் ரேவந்த் ரெட்டி. இவர்தான் தெலுங்கானா காங்கிரஸின் 'அறிவிக்கப்படாத' முதல்வர் வேட்பாளர்.
பாஜக டூ தெலுங்கு தேசம்: இதில் சுவாரசியம் என்னவெனில் ரேவந்த் ரெட்டி தமது அரசியல் பயணத்தை பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் இருந்துதான் தொடங்கினார். 2007-ல் சுயேட்சையாக எம்.எல்.சியானார். இதனைத் தொடர்ந்து தெலுங்குதேசம் கட்சியில் இணைந்து 2009-ல் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். அப்போது ரேவந்த் ரெட்டி வீழ்த்தியது 5 முறை எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் ஜாம்பவான் குருநாத் ரெட்டியை. அதனால் ரேவந்த் ரெட்டி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 2014 தேர்தலிலும் இதே அதகள வெற்றி பெற தெலுங்கானா சட்டசபையில் தெலுங்குதேசம் கட்சித் தலைவரானார்.
காங்கிரஸில் ரேவந்த் ரெட்டி: 2017-ம் ஆண்டு தெலுங்குதேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ரேவந்த் ரெட்டி, 2018 தேர்தலில் கோடங்கல் தொகுதியில் போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்து ஏமாற்றத்தைப் பெற்றார். ஆனாலும் காங்கிரஸ் மேலிடம் ரேவந்த் ரெட்டி மீது நம்பிக்கை வைத்து அவரை செயல் தலைவர்களில் ஒருவராக்கியது. 2019 லோக்சபா தேர்தலில் மல்காஜ்கிரி தொகுதி எம்.பி.யானார். 2021-ல் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் நியமித்தது.
கேசிஆருக்கு எதிராக: இப்போது ரேவந்த் ரெட்டி தலைமையில்தான் தெலுங்கானா மாநில காங்கிரஸ் புத்துயிர் பெற்று அரியாசனம் நோக்கி நகருகிறது. அதுவும் 2 முறை முதல்வர் பதவி வகித்த சந்திரசேகர ராவை வீழ்த்த கமரெட்டி தொகுதியில் களம் காண்கிறார் ரேவந்த் ரெட்டி. தெலுங்கானா தேர்தலில் அதிஉச்ச கவனம் பெற்ற தொகுதியாக கமரெட்டி உருவெடுத்திருக்கிறது. ரேவந்த் ரெட்டி சாதிப்பாரா? மகுடம் சூட்டுவாரா? அரியாசனம் ஏறுவாரா? என்பது டிசம்பர் 3-ல் தெரிந்துவிடும்.
-
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications