ஆந்திரா சட்டசபையில் தெலுங்கானா மசோதா தாக்கல்- மசோதாவுக்கு தீ வைத்து எரிப்பு!
ஹைதராபாத்: ஆந்திரா சட்டசபையில் உறுப்பினர்களின் கடும் அமளிக்கு இடையே தெலுங்கானா வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை உறுப்பினர்கள் கிழித்தும், தீ வைத்து எரித்தும் அமளியில் ஈடுபட்டனர்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி புதிய மாநில வரைவு மசோதாவுக்கு இந்த மாத தொடக்கத்தில் ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை, அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு கடந்த 5-ந்தேதி அனுப்பி வைத்தது.
பின்னர் இந்த மசோதாவை ஆந்திர சட்டசபையில் நிறைவேற்றுவதற்காக, ஜனாதிபதி கடந்த 12-ந்தேதி அனுப்பி வைத்தார். இதை நிறைவேற்ற அடுத்த மாதம் 23-ந்தேதி வரை காலக்கெடுவும் அளிக்கப்பட்டது.

நேற்று காலை 9 மணிக்கு ஆந்திர சட்டசபை கூடியது. அப்போது சபாநாயகர் தெலுங்கானா வரைவு மசோதாவை தாக்கல் செய்ய முயன்றார். ஆனால் சீமாந்திரா பகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம், காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று தெலுங்கானாவுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர்.
உடனே தெலுங்கானா பகுதியை சேர்ந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் சபையின் மையப்பகுதிக்கு சென்று, பல்வேறு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு தெலுங்கானாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.
எனினும் இந்த அமளிக்கு இடையே, 65 பக்க தெலுங்கானா வரைவு மசோதாவை சபாநாயகர் சபையில் தாக்கல் செய்தார். அப்போது தெலுங்கு தேச உறுப்பினர் தேவிநேனி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள், சபைக்குள்ளேயே அந்த மசோதா நகல்களை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் வெளியேறினர். அப்போது தெலுங்குதேசம் கட்சியின் சட்டமன்ற தலைவர் உமா மகேஸ்வர ராவ், மசோதாவின் நகலை கிழித்து எறிந்தார். இதை டி.ஆர்.எஸ். கட்சி உறுப்பினர்கள் தடுக்க முயன்றனர். அப்போது இரு கட்சியினரின் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த மோதலை தடுத்து நிறுத்தினர்.
இந்தநிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீமாந்திரா பகுதி உறுப்பினர்கள், மசோதாவை கிழித்து அவற்றை தீ வைத்து எரித்தனர். இதை போலீசார் தடுக்க முயன்றும் முடியாததால் அவை எரிந்து சாம்பலானது. இந்த சம்பவங்களால் ஆந்திர சட்டசபை வளாகம் நேற்று போர்க்களம் போல காட்சியளித்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications