சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு கலைக்கப்பட்டது.. ஆளுநர் ஒப்புதல்!
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு இன்று பதவி விலகி உள்ளார்.
ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு இன்று பதவி விலகி உள்ளார். இதனால் அங்கு ஆட்சி கலைந்துள்ளது.
தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த 2014ல் தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்றார். இந்த நிலையில் தற்போது அவரது ஆட்சி முடிய இன்னும் 9 மாதங்கள் மீதம் உள்ளது.
அவருக்கு மக்கள் ஆதரவும் நன்றாகவே உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று சந்திரசேகர ராவ் முடிவெடுத்து உள்ளார்.

ஏன் முடிவு
முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க சந்திரசேகர ராவ் முடிவெடுத்தது உள்ளார். இதன் மூலம் அடுத்த தேர்தலில் அவர் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் இப்போதே ஆட்சியை கலைத்துள்ளார்.

ஏற்கனவே சொன்னார்
சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் பெரிய கூட்டமும் நடத்தினார். தேர்தல் பிரச்சார கூட்டம் போலவே இது இருந்தது. அதில் சந்திரசேகர ராவ் ''ஆட்சியைக் கலைப்பதாக இருந்தால் தொண்டர்களிடம் முன்கூட்டியே தெரிவிப்பேன்'' என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

அமைச்சரவை கூட்டம்
இந்நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் கூட்டம் நடத்தினார். காலை பத்து மணிக்கு இந்த கூட்டம் நடந்தது. இந்த அமைச்சரவையை கலைக்க முடிவு எடுக்கப்பட்டது.அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் அம்மாநில ஆளுநர் நரசிம்மனை சந்தித்தார் சந்திரசேகர ராவ். அம்மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சியை கலைக்க கடிதம் அளித்தார்.

கலைக்கப்பட்டது
முதல்வர் சந்திரசேகர ராவ் தனது எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுனரை சந்தித்தார். அவர் அழுத்த பரிந்துரை ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டார். இதனால் இன்றே தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர ராவ் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் அங்கு தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications