Corona: ட்ரம்ப் குணமடைய பட்டினி இருந்து பிரார்த்தனை செய்த தெலங்கானா விவசாயி உயிரிழப்பு!!
மேதக்: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குணமடைய பட்டினியுடன் தூங்காமல் பிரார்த்தனை செய்து வந்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி பஸ்ஸா கிருஷ்ண ராஜூ மாரடைப்பினால் உயிரிழந்தார்.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பஸ்ஸா கிருஷ்ண ராஜூ. ட்ரம்ப்புக்கு கொரோனா என்று தெரிய வந்ததில் இருந்து இவர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். ட்ரம்ப் குணமடைய வேண்டி தொடர்ந்து பட்டினி இருந்து கடவுளை பிரார்த்தி வந்துள்ளார். இந்த நிலையில் மேதக்கில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மாரடைப்பில் உயிரிழந்தார்.

கடந்தாண்டு ஆறடி உயர ட்ரம்ப் சிலை அமைத்து, தினமும் பூஜித்து வந்தார். இதையடுத்து இவரது பெயர் அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் மீடியாக்களில் வெளியாகி இருந்தது. இவர் தீவிர ட்ரம்ப் ஆதரவாளர், தொண்டர், ரசிகர் என்று இவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரது நண்பர் ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருந்த பேட்டியில், ''ட்ரம்ப்புக்கு உடல்நலம் சரியில்லை என்று அறிந்தவுடன் மிகவும் வேதனை அடைந்தார். இதனால் தூக்கம் இல்லாமல் வருத்தப்பட்டு வந்தார். ட்ரம்ப் குணமடைய வேண்டும் என்று கடந்த நான்கைந்து நாட்களாக பட்டினியுடன் பிரார்த்தனை மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில் மாரடைப்பில் உயிரிழந்தார்'' என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications