'நான் வெஜ்' பிரியர்கள் தெலுங்கானாவில் தான் அதிகம்... ஆய்வில் தகவல்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இந்தியாவிலேயே அசைவம் உண்பவர்களில் அதிகம்பேர் கொண்ட மாநிலமாக தெலுங்கானா மாநிலம் திகழ்வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடம், ரிஜிஸ்ட்ரர் ஜெனரல் ஆப் இந்தியா (Registrar General of India) என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் தெலுங்கானா மாநிலத்தில் ஏறக்குறைய 98.8 சதவீதம் ஆண்களும், 98.6 பெண்களும் சரிவிகிதத்தில் அசைவ உணவு உண்பவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. தெலங்கானாவை அடுத்து மேற்குவங்கம், ஆந்திரப்பிரதேசம், ஒடிசா மற்றும் கேரளா ஆகியவவை அசைவ உணவுப்பிரியர்கள் அதிகமானோர் உள்ள மாநிலங்களாக திகழ்கின்றன.

Telangana is India’s most non-vegetarian state

முக்கியமாக, ஆந்திர மற்றும் தெலுங்கான ஆகிய இரண்டு மாநிலங்களும் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியில் முன்னிலையிலேயே உள்ளன. 1309.58 கோடி முட்டை உற்பத்தி செய்து ஆந்திரா இரண்டாவது இடத்திலும், தெலுங்கான மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. 5.27 லட்சம் மெட்ரிக் டன் இறைச்சி உற்பத்தியுடன் ஆந்திரா 4வது இடத்திலும். தெலுங்கான 6வது இடத்திலும் உள்ளன.

தெலுங்கானாவில் மாமிச உணவு அதிகம் உட்கொள்வதற்கு அம்மாநில மக்களின் பாரம்பரிய உணவு பழக்கம் தான் காரணம் என கூறப்படுகிறது. ராஜஸ்தானில் 26.8 சதவீதம் ஆண்கள், 23.4 சதவீதம் பெண்கள் மட்டுமே அசைவ உணவு சாப்பிடுகிறார்களாம்.

தென் இந்தியாவைப் பொறுத்தவரை கர்நாடக மாநிலத்தில் தான் குறைந்த அளவில் அசைவ விரும்பிகள் உள்ளனர். ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவை சைவ உணவு உண்பவர்கள் அதிகம் பேர் கொண்ட மாநிலங்களாக திகழ்கின்றன. நாடு தழுவிய அளவில் பார்த்தால் அசைவ உணவு உண்பவர்களின் சராசரி விகிதம், 2004 ல் 75 சதவீதமாக இருந்தது. இந்த சராசரி விகிதமானது கடந்த 2014-ம் ஆண்டில் 71 சதவீதமாக குறைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+