'ரவுடி'.. ஜெயசுதா படத்தைத் தடை செய்ய தெலுங்கானா வக்கீல்கள் போர்க்கொடி!
ஹைதராபாத்: நடிகை ஜெயசுதா, மோகன்பாபு இணைந்து நடித்துள்ள ரவுடி என்ற தெலுங்குப் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தெலுங்கானாவைச் சேர்ந்த வக்கீல்கள் அமைப்பு தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
காங்கிரஸைச் சேர்ந்த ஜெயசுதா, செகந்திரபாத் சட்டசபைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் ஜெயசுதா - மோகன்பாபு இணைந்து நடித்துள்ள ரவுடி என்ற படம் அங்கு திரைக்கு வந்துள்ளது.

இப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார். படத்தில் ஜெயசுதாவுக்கு சக்தி வாய்ந்த கதாபாத்திரம். இதனால் ஜெயசுதாவின் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானா சேர்ந்த வக்கீல் சங்கம் இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சங்கம் சார்பில் நரசிம்மா ரெட்டி என்பவர், தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளார்.
அதில், தேர்தலில் போட்டியிடும் நடிகர், நடிகைகளின் படத்தை டி.வி.யிலும், திரையரங்கத்திலும் ஒளிபரப்பக் கூடாது என்று விதி உள்ளது. ஆனால் ஜெயசுதா படம் திரையிடப்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர வழி வகுக்கிறது எனவே அந்த படத்தை ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications