தெலுங்கானா விவகாரம்: 'பெப்பர் ஸ்ப்ரே' எம்.பி. ராஜகோபால் அரசியலுக்கு முழுக்கு
ஹைதராபாத்: நாடாளுமன்றத்தில் பெப்பர் ஸ்ப்ரேயை பயன்படுத்திய விஜயவாடா எம்.பி. லகடபாதி ராஜகோபால் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக அரசியலில் இருந்து விலகியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா எம்.பி.யாக இருந்தவர் லகடபாதி ராஜகோபால். அவர் ஆந்திராவை பிரிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் பெப்பர் ஸ்ப்ரேயை பயன்படுத்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

இந்நிலையில் நேற்று லோக்சபாவில் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ராஜகோபால் உள்ளிட்ட எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆந்திராவை பிரிப்பதற்கு கண்டனம் தெரிவித்து ராஜகோபால் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் தான் அரசியலில் இருந்தே விலகுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
தெலுங்கு பேசும் மக்களை பிரித்ததில் நான் வேதனை அடைந்துள்ளேன். இது ஒரு துக்க தினம். எனக்கு அரசியலில் இருந்த ஆர்வம் போய்விட்டது என்றார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு?











Click it and Unblock the Notifications