4 மாநிலங்களைச் சேர்ந்தோர் நடத்திய கிரிக்கெட் சூதாட்டம்.. ஹைதராபாத்தில் 13 பேர் கைது
ஹைதராபாத்: நான்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் நடத்திய மிகப் பெரிய கிரிக்கெட் சூதாட்டத்தை ஹைதராபாத் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் மகேந்தர் ரெட்டி கூறுகையில், புதன்கிழமையன்று ஹைதராபாத்தில் 3 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது அங்கு, வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் பொட்டியை வைத்து சூதாட்டம் நடந்து கொண்டிருந்தது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெலுங்கனா, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து ரூ. 26.48 லட்சம் ரொக்கப் பணம், தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 13 பேர் கைதானார்கள்.
இவர்கள் 4 லைன் சிடிஎம்ஏ செல்போன்கள், 9 லேன்ட்லைன் போன்கள், 6 லேப்டாப்கள், 3 டிவி பெட்டிகள், 36 சாதாரண செல்போன்களை வைத்திருந்தனர்.
இது ஒரு திட்டமிட்ட சூதாட்டமாகும். இந்த சூதாட்டக் கும்பலின் தலைவர் சத்ய பிரகாஷ் ஜிந்தால் எனப்படும் நிக்கு ஆவார். இவரை நிக்கு பாய் என்றும் அழைக்கிறாரா்கள். இவர்தான் இந்த சூதாட்டத்தை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நடத்துகிறார்.
நிக்குவின் கீழ் பல துணை புக்கிகள் செயல்படுகிறார்கள். இவர்கள் தகவல்களை செல்போன் மூலம் நிக்குவுக்குத் தெரிவிக்கிறார்கள்.
தனது வேலைக்காக ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சம்பளத்திற்கு ஆட்களை வைத்துள்ளார் நிக்கு. இவர்களுக்கு மாதச் சம்பளம் கொடுத்து வருகிறார்.
இந்த 13 பேர் கைது தொடர்பாக 3 காவல் நிலையங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக ரெட்டி தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications