மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்- சீமாந்திரா காங். எம்.பி.க்கள் நோட்டீஸ்!!
டெல்லி: தெலுங்கானா விவகாரத்தில் அதிருப்தியில் இருக்கும் சீமாந்திரா காங்கிரஸ் எம்.பிக்களே மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மனம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் இதர கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனா.
இந்நிலையில் சீமாந்திரா பகுதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அக்கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் இதுதொடர்பாக லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், 10 மாவட்டங்களுடன் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை அறிவித்த விவகாரம் தொடர்பாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.
சீமாந்திரா காங்கிரஸ் எம்.பி.க்களான எல். ராஜகோபால், எஸ்.பி.ஒய். ரெட்டி, சாப்பம் ஹரி, ஆர். சாம்போசிவராஜ், ஹர்ஷாகுமார் மற்றும் வி. அருண் குமார் ஆகியோர் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளனர்.
அத்துடன் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்படும் போது, அனைத்து சீமாந்திரா காங். எம்.பி.க்களும் வெளியேற திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications