ஜூன் 2ல் உதயமாகிறது புதிய மாநிலம் ‘தெலங்கானா’: மத்திய அரசு அறிவிப்பு
ஹைதராபாத்: வரும் ஜூன் 2 ஆம் தேதி நாட்டின் 29 மாநிலமாக தெலங்கானா உதயமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் புதிய மாநிலமான தெலுங்கானா குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் தெலுங்கானா மாநிலம் உருவாக்கத்திற்கு வகை செய்யும் ஆந்திர மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 10 மாவட்டங்களைக் கொண்ட தெலங்கானா தனி மாநிலமாகவும், 13 மாவட்டங்களை உள்ளடக்கிய ஆந்திர மாநிலமாகவும் பிரிக்கப் பட்டுள்ளது.
ஆனால், இந்த இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக ஹைதராபாத் 10 ஆண்டுகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீமாந்திரா பகுதிக்கு 5 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் வரும் 2ம் தேதி முதல் உதயமாவதாகவும், அன்றைய தினத்தில் இருந்தே அம்மாநிலம் தனி மாநிலமாக செயல் பட ஆரம்பிக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது
ஆந்திராவை இரு மாநிலங்களாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து தற்போது அங்கு தற்போது அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications