தெலுங்கானாவிற்குள் நுழையும் வாகனங்களுக்கு வரி! பேருந்துக்கட்டணம் உயர வாய்ப்பு!!
ஹைதராபாத்: ஏப்ரல் 1ஆம் தேதி முதல், ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா மாநிலத்திற்குள் நுழையும் அனைத்து வகை சரக்கு வாகனங்களுக்கும் நுழைவு வரி விதிக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையிலான சரக்கு வாகன வாடகை மட்டுமல்லாது பேருந்து போக்குவரத்தும் கடுமையாக உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலப் பிரிவினைக்கு முன்பு ஆந்திர ஆளுநர் நரசிம்மன் கூறுகையில், மார்ச 31ஆம்தேதி வரை நுழைவு வரி விதிக்கப்படாது என்று கூறியிருந்தார். அந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

இதையடுத்து நாளை முதல் வரி விதிக்கப்படவுள்ளது.
அதேசமயம் ஹைதரபாத் நகரானது, 10 வருடத்திற்கு இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும் என்பதால் ஹைதராபாத்துக்குள் நுழைந்தாலும் வரி விதிக்கப்படுமா என்பது தெரியவில்லை.
இதற்கிடையே, விஜயவாடா - ஹைதராபாத் இடையிலான பஸ் கட்டணம் ரூ 600லிலிருந்து ரூ. 1000 ஆக உயரப் போகிறதாம். தற்போது தமிழகம், கர்நாடகத்திலிருந்து தெலுங்கானா செல்ல வேண்டிய வாகனங்கள் ஆந்திரா மூலமாகத்தான் போக வேண்டும். எனவே ஆந்திராவும் வரி விதிக்கும் என்று தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications