டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கு: சிபிஐ கெடு முடிந்தது: தயாநிதி மாறனுக்கு மீண்டும் சம்மன்?
சென்னை: பிஎஸ்என்எல் டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில், முக்கிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு சிபிஐ விதித்த கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிந்தது. ஆனால், அவர் எந்த ஆவணங்களையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, அவரை மீண்டும் விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2004, மே மாதம் முதல் 2007, மே மாதம் வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். 2007ல் அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகியதும், திமுக எம்.பியாக நீடித்தார். அப்போது அமைச்சர் என்ற முறையில் தனக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசி எண் "24371515' சேவையை "எம்.பி. ஒதுக்கீட்டுக்கானதாக மாற்றித் தரும்படி பிஎஸ்என்எல் தலைமை அதிகாரிக்கு அவர் கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து, "தயாநிதி மாறன் குறிப்பிட்ட "2437' எனத் தொடங்கும் தொலைபேசி எண்ணுக்குரிய சேவை, சாதாரண பயன்பாட்டுக்கானதல்ல. அதனுடன் நூற்றுக்கணக்கான தொலைபேசி சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன' என்பது கண்டறியப்பட்டு, மேலதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
2007ம் ஆண்டு மார்ச் மாதம் 24371515 என்ற ஒரு எண்ணில் இருந்து மட்டும் 48 லட்சத்து 72,027 ரூபாய் அளவிற்கு டெலிபோன் கால் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். 323 தொலைபேசி லைன்கள் மூலம் கிட்டத்தட்ட ரூ.440 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது சிபிஐயின் புகாராகும். இந்த வழக்கில் கைது செய்யப்படமல் தப்பிக்க தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார். எனினும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

சிபிஐ விசாரணை
இதனையடுத்து, கடந்த 1, 2, 3ஆம் தேதிகளில் தயாநிதி மாறனை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்துக்கு அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது 35 கேள்விகள் வரை தயாநிதி மாறனிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.

சட்ட விரோத இணைப்புகள்
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், அதிக சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு சேவை வழங்கும் 323 இணைப்புகள் உள்பட மொத்தம் 764 இணைப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படுவது பற்றி தயாநிதி மாறனிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் கிட்டத்தட்ட 16 மணிநேரம் நடைபெற்ற விசாரணையில் அதிகாரிகளின் கேள்விகளுக்கு சரியான பதில்களை தயாநிதி மாறன் தரவில்லை என்று கூறப்படுகிறது.

கிடுக்கிப்பிடி கேள்வி
சிபிஐ தயாரித்த அறிக்கை அடிப்படையில், தயாநிதி மாறன் வீட்டில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்தி சன் டிவி நிறுவனம் வெளிநாடுகளுக்கு விடியோக்களை "ஆப்டிக் ஃபைபர் கேபிள்' மூலம் அனுப்பியது பற்றி அவரிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ஆனால், இதுதொடர்பான கேள்விகளுக்கு அவர் உரிய விளக்கத்தை அளிக்கவில்லையாம். அதே நேரத்தில் தன் கையில் ஒரு ஆவணத்தை வைத்துக் கொண்டு பேசிய அவர், மேலும் தனது தரப்பு ஆதாரமாக கூடுதல் ஆவணங்களைத் தருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

கெடு முடிந்தது
இதையடுத்து, அந்த ஆவணங்களை அளிக்க தயாநிதி மாறனுக்கு சிபிஐ அதிகாரிகள் ஒரு வார அவகாசம் அளித்தனர். அவர்கள் அளித்த வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 10) முடிவடைந்தது.
இந்நிலையில், தயாநிதி மாறன் தெரிவித்தபடி இதுவரை எந்த ஆவணங்களையும் அவர் நேரிலோ அல்லது தனது பிரதிநிதி மூலமோ அனுப்பி வைக்கவில்லை என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவகாசம் நீட்டிப்பு
எனினும் திங்கட்கிழமை வரை தயாநிதி மாறனுக்கு கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் அவர் ஆவணங்களை தாக்கல் செய்யாத பட்சத்தில் தயாநிதி மாறனை மீண்டும் விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்ப சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதாக வாய்ப்பு
ஏற்கனவே விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால் தயாநிதி மாறனின் முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தை சிபிஐ அதிகாரிகள் அணுகப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மீண்டும் தயாநிதி மாறனுக்கு சம்மன் அனுப்பினால் அவர் கைதாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications