ஜெகன் மோகன் ரெட்டியை வீடு தேடிச் சென்று சந்தித்த நடிகர் சிரஞ்சீவி...!
Recommended Video
அமராவதி: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை மெகாஸ்டார் சிரஞ்சீவி சந்தித்து பேசியிருப்பது அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த 2008-ல் பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் கட்சியை தொடங்கிய சிரஞ்சீவியால், அதை சரியாக கொண்டு செல்ல முடியவில்லை. இதையடுத்து கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் ஐக்கியமானார் அவர். சிரஞ்சீவிக்கு மன்மோகன் சிங் அரசில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனிடையே சிரஞ்சீவியை ஆந்திராவில் காங்கிரஸின் முகமாக பயன்படுத்த நினைத்தது கட்சித் தலைமை.

ஆனால் அவரோ ஆளைவிட்டால் போதும் என்ற நிலையில், 2014-ம் ஆண்டு காங்கிரஸ் தோல்விக்கு பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். மேலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து மெதுவாக ஒதுங்கத்தொடங்கிய அவர் கட்சி தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. இந்நிலையில் அவரை பாஜகவில் சேருமாறு அக்கட்சியின் தலைமை அழைப்பு விடுப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் எப்படி சூப்பர்ஸ்டார் ரஜினியோ அதேபோல் ஆந்திராவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி. இவரை பயன்படுத்தி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாஜகவை பலப்படுத்த நினைக்கிறாராம் அமித்ஷா. ஆனால் மீண்டும் அரசியலுக்கு செல்ல சிரஞ்சீவிக்கு துளியும் விருப்பமில்லை. தொடர்ந்து சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை அவரது வீடு தேடிச் சென்று சந்தித்த நடிகர் சிரஞ்சீவி, சுமார் அரைமணி நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு புறப்பட்டார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனக் கூறப்பட்டாலும், முக்கியமான விவகாரம் குறித்தே இருவரும் பேசியிருக்கக்கூடும் எனத் தெரிகிறது. வீட்டிற்கு வந்த நடிகர் சிரஞ்சீவிக்கு வெள்ளியில் செய்யப்பட்ட அன்னப்பறவை உருவத்தை வழங்கினார் ஜெகன்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications