போதைப் பொருள் கடத்தல்: தெலுங்கு இளம் நடிகர், நைஜீரியர் கைது
ஹைதராபாத்: ஆந்திராவில் போதைப் பொருள் கடத்திய வழக்கில் தெலுங்கு நடிகர் நந்துரி உதய் கிரண் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கு நடிகர் நந்துரி உதய் கிரண் (29) மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த ரோதிமி ஒலுசொலா கெஹிந்தே ஆகியோர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக ஹைதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதி அருகே அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 கிராம் கொக்கைன் போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

பிசினஸ் விசாவில் இந்தியா வந்த ரோதிமி டெல்லியில் உள்ள சூடானைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி அதை பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் விற்று வந்துள்ளார்.

அவர் ஒரு கிராம் போதைப் பொருளை ரூ.1,500க்கு வாங்கி அதை ரூ. 3 ஆயிரத்திற்கு அதாவது இரட்டிப்பு விலைக்கு விற்று வந்துள்ளார். அவர் உதய் கிரணை சந்தித்து அவருக்கு போதைப் பொருளை வினியோகித்து வந்துள்ளார் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
உதய் கிரண் பராரே, ரக்ஷகுலு, யுவராஜ்யம் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications