இந்திய விவசாயிகளை தடுத்த வங்க தேசத்தவர்களால் பதற்றம்
அகர்தலா: இந்தியர்கள் தங்கள் எல்லையில் விவசாயம் செய்வதாக கூறி வங்கதேசத்தினரும், அந்தநாட்டு எல்லை பாதுகாப்பு படையும் திரிபுரா மாநில மக்களிடம் தகராறு செய்ததால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவுக்கும் வங்கதேசத்துக்கும் நடுவே, 856 கிலோமீட்டர் தூரம் எல்லைக்கோடு உள்ளது. இதை ஒட்டினாற்போல உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் வங்கதேசத்து மக்களுக்கும் அவ்வப்போது தகராறு எழுந்துவருகிறது.
திரிபுரா மாநிலத்தின் மோகன்பூர் கிராமத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்துக்கு நீர்பாய்ச்ச சென்றபோது, வங்கதேசத்தவர்களும், அந்த நாட்டு எல்லை பாதுகாப்பு படையினரும் இவர்களை தடுத்து நிறுத்தி திரும்பிபோக கூறியுள்ளனர். இதற்கு இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.
இதையடுத்து இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களின் தலையீட்டின் பேரில் இந்திய விவசாயிகள் மீட்கப்பட்டனர். பாதுகாப்பு படை தலைமை செய்தித்தொடர்பாளர் பாஸ்கர் ராவத் கூறுகையில்:
சம்பவம் நடந்த கிராமத்தை ஒட்டி 1.2 கிலோமீட்டர் தூரத்துக்கு வங்க தேச எல்லை உள்ளது. இந்த வழியாக பாயும் தலாய் நதி தனது போக்கை மாற்றிக்கொண்டு பாயத்தொடங்கியுள்ளதால் எல்லையை நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லையில் வைக்கப்பட்டிருந்த கற்கள் நதியின் வெள்ளத்தால் அகற்றப்பட்டுவிட்டன. இதற்காக இரு நாட்டு நில அளவியலாளர்களை அழைத்து வந்து நில அளவை செய்ய தீர்மானித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications