தீவிரவாத ஒழிப்பு: ஒபாமாவிடம் இருந்து இந்தியா பெரிதாக எதையும் எதிர்பார்ப்பது வேஸ்ட்!
டெல்லி: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வரவுள்ள நிலையில் பல எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் தீவிரவாதம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா உதவும் என்பது சந்தேகமாக உள்ளது.
பலமுனைகளில் இந்தியா தீவிரவாதத்தை எதிர்த்து போரிட்டு வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் காலூன்ற முயல்வதால் தீவிரவாத பிரச்சனையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
நேற்று ஒபாமா அமெரிக்காவில் பேசுகையில் சார்லி ஹெப்டோ இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் என்பதை அங்கீகரிக்க மறுத்துவிட்டார். அவரது பேச்சு யதார்த்தமாக இல்லை என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யதார்த்தம்
அரேபிய தீபகற்பத்தில் உள்ள அல் கொய்தா பெரிய தலைவலியாக மாறி வருகிறது என்பது தெரிந்த விஷயம். சார்லி ஹெப்டோ தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றுள்ளது கண்டுகொள்ள வேண்டிய விவகாரம். அரேபிய தீபகற்பத்தில் உள்ள அல் கொய்தா வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் தாக்கம் ஆப்பிரிக்கா ஏன் ஐரோப்பில் கூட உள்ளது.
அல் கொய்தா அமைப்பின் அனைத்து கிளைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு வைத்துள்ளன. இந்தியாவில் ஜொலிக்க முடியாமல் உள்ள அல் கொய்தா கிளை பொறுமையாக காத்துக் கொண்டிருக்கிறது.
நேற்றைய உரையில் ஒபாமா ஒரு முறை கூட அல் கொய்தாவின் பெயரை தெரிவிக்கவில்லை. 9/11 தாக்குதலுக்கு பிறகு ஒரு அமெரிக்க அதிபர் தனது உரையில் முதன்முறையாக அல் கொய்தாவின் பெயரை பயன்படுத்தவில்லை. கடந்த ஆண்டு லிபியா, ஏமனில் நடந்த பிரச்சனையை எதிர்த்து போரிட அமெரிக்க காட்டிய ஆர்வம் இம்முறை ஒபாமாவின் பேச்சில் இல்லை.

ஐஎஸ்ஐஎஸ்
ஒபாமா தனது உரையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகளுக்கு எதிரான அமெரிக்காவின் போர் பற்றி தெரிவித்தார். இந்த போரில் அமெரிக்கா என்ன சாதித்துவிட்டது. சொல்லப் போனால் அமெரிக்கா போர் தொடுத்த பிறகு தான் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைபப்பு வலுவாகியுள்ளது.
ஈராக் அல்லது சிரியாவில் மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை எதிர்த்து போரிடுவதில் பயன் இல்லை. அந்த அமைப்பு உலக அளவில் பிரபலமாகிவிட்டது. இது தொடர்பாக அமெரிக்கா எதுவும் செய்யவில்லை, ஒபாமாவும் நேற்றைய உரையில் தெரிவிக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போர் வலுவாக இல்லை.
மோடி அமெரிக்கா சென்றபோது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் சேருமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

நிதி
அல் கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஏராளமான நிதி கிடைக்கிறது. இது போன்ற அமைப்புகளுக்கு நிதி தான் முதுகெலும்பு. சவுதி அரேபியாவில் இருந்து இந்த அமைப்புகளுக்கு செல்லும் நிதி பற்றி அமெரிக்கா பேசவே இல்லை. சவுதியை பொறுத்தவரை அமெரிக்காவிடம் இருந்து பெரிதாக எதிர்பார்க்க முடியாது. 9/11 தாக்குதல் ஆவணங்களில் 28 பக்கங்களை அமெரிக்கா வெளியிடவில்லை. அந்த பக்கங்களில் அமெரிக்காவை தாக்க சவுதி நிதி அளித்தது பற்றிய தகவல்கள் உள்ளதால் அவற்றை அது வெளியிடும் என்று எதிர்பார்க்க முடியாது.
தீவிரவாத அமைப்புகளுக்கு சவுதி நிதி அளிப்பது இந்தியாவுக்கு கவலை அளித்துள்ளது. தீவிரவாதத்தை எதிர்த்து போராட இந்தியா, சவுதி இடையே ஒத்துழைப்பு இருந்தாலும் நிதி விவாகரம் பற்றி பேசப்படவில்லை.
ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் துணை கண்டத்தில் உள்ள அல் கொய்தா ஆகியவை சவுதி அளிக்கும் நிதியை நம்பியே உள்ளன. இது குறித்து அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியாவால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது.

பாகிஸ்தான்
தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்றாலே இந்தியாவின் முதல் கவலை பாகிஸ்தான் தான். ஒபாமா இந்தியா வருகையில் பாகிஸ்தான் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தக் கூடாது என்று தெரிவித்து அமெரிக்கா உளறிவிட்டது.
அமெரிக்கா கூறியுள்ளதை பார்த்தால் ஒபாமா கிளம்பிய பிறகு இந்தியாவை தாக்கலாம் போன்று. பாகிஸ்தான் விவகாரத்தில் பல ஆண்டுகளாக அமெரிக்கா இந்தியாவை கைவிட்டுள்ளது. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்களை அமெரிக்கா கேட்டது. ஆனால் 9/11 தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா எந்த ஆதாரங்களையும் அளிக்கவில்லை.
பாகிஸ்தான் பற்றிய கவலை ஹபீஸ் சயீதில் துவங்கி தாவூத் இப்ராஹீமில் முடிந்துள்ளது. அந்த இருவரையும் பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்க அவ்வப்போது முணுமுணுத்துள்ளது. அமெரிக்கா கோரிக்கை விடுத்தாலோ, முணுமுணுத்தாலோ பாகிஸ்தான் அவர்களை ஒப்படைத்துவிடாது. இதையும் தாண்டி அது ஏதாவது செய்ய வேண்டும்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications