24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 கொலை.. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டூழியம்.. தொடர் தாக்குதல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 2வது நபர் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு பொது மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று இரவு ஜம்மு காஷ்மீரில் உள்ள கடை ஒன்றில் தீவிரவாதி துப்பாக்கி சூடு நடத்தியதில் கடையில் பணியாற்றிய நபர் கொல்லப்பட்டார். கடையில் பணியாற்றியவர் பெயர் முகமது இப்ராஹிம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் அங்கு காஷ்மீரி பண்டிட் ஒருவருக்கு சொந்தமான கடையில் பணியாற்றி வந்தார்.

தாக்குதல்
அந்த கடைக்கு வந்த தீவிரவாதி ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் இப்ராஹிம் அங்கேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இரவு முழுக்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

இரண்டாவது கொலை
கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது கொலை ஆகும் இது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பட்மாலு பகுதியில் இன்னொரு தீவிரவாதி நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் போலீசார் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளின் துப்பாக்கி சூடு தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

தாக்குதல்கள்
ஜம்மு காஷ்மீரில் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் மீது கடந்த இரண்டு வாரமாக கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு ஜம்மு காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பீகாரை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல்
காஷ்மீரில் வெளிமாநில மக்கள் குடியேறி அங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 3 வாரத்தில் நடத்தப்பட்ட இது போன்ற தாக்குதல்களில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதிகமாக பீகார், உத்தர பிரதேசத்தில் இருந்து வந்து காஷ்மீரில் வேலை பார்க்கும் நபர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications