அராஜகம்.. திடீர்னு அரசு பள்ளியில் புகுந்து 2 ஆசிரியர்களை சுட்டுகொன்ற தீவிரவாதிகள்.. ஜம்மு காஷ்மீரில்
அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் இன்று காலை பள்ளி ஒன்றிற்குள் புகுந்த தீவிரவாதிகள் 2 ஆசிரியர்களை சுட்டுக் கொன்றுவிட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
காஷ்மீரில் அண்மைக்காலமாகவே அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.. 2 நாளைக்கு முன்பும் இப்படித்தான் ஒரு கொடூரம் நடந்தது.
ஸ்ரீநகரில் உள்ள இக்பால் பூங்கா பகுதியில் மக்கன் லால் பிந்த்ரூ என்பவர் பல வருடங்களாகவே மருந்து கடை நடத்தி வந்தார்... இவருக்கு 70 வயதாகிறது..

மர்மநபர்
இவரை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டார்.. இவரை கொன்றது அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.. காரணம், 1990களில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்தபோது, தன்னுடைய மருந்து கடையை மூடாமல் பொது மக்களுக்காக சேவை செய்தவர்தான் இந்த பிந்த்ரூ என்பவர். அந்த ஆத்திரத்தில்தான், இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

தீவிரவாதிகள்
அதேபோல, ஸ்ரீநகர் லால் பஜார் பகுதியில் தெருவோர பானிபூரி கடைக்காரர் ஒருவர் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார்... அவர் பெயர் வீரேந்திர பஸ்வான்.. பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்தவர். இதற்கடுத்ததாக, பந்திப்பூராவில் முகமது ஷாஃபி என்ற கார் டிரைவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.. ஒரு மணி நேரத்தில் 3 பேரை அடுத்தடுத்து சுன்று கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

கண்டனம்
ஜம்மு -காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்... உடனடியாக, காஷ்மீரில் தேடுதல் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டது.. ஆனால், இன்று காலை மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அங்கு நடந்துள்ளது.

கூட்டம்
ஜம்மு - காஷ்மீரில் உள்ள அரசு பள்ளியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 2 ஆசிரியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.. இந்த தகவலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்... ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு இன்று காலை தலைமை ஆசிரியர் ரூமில் ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது பள்ளிக்குள் திடீரென 2 தீவிரவாதிகள் புகுந்துவிட்டனர்.. அங்கிருந்த தலைமை ஆசிரியர் சுக்விந்தர் கவுர், மற்றொரு ஆசிரியர் தீபக் ஆகியோரை ரூமுக்கு வெளியே அழைத்து வந்திருக்கிறார்கள்..

ஆசிரியர்கள்
என்ன ஏதென்றுகூட விசாரிக்காமல், யாருமே எதிர்பார்க்காதவகையில், 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனால் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து விழுந்த 2 பேரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால் தீவிர சிகிச்சை தந்தும பலனளிக்காமல் 2 பேருமே பரிதாபமாக பலியாகினர். அடுத்தடுத்து அப்பாவி மக்கள் அங்கு கொல்லப்பட்டு வருவது பெரும் அச்சத்தையும் கலக்கத்தையும் தந்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications