தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்கியதில் 3 பேர் பலி
ட்ரேல் : ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பேருந்து நிலையம் அருகே தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் ட்ரேல் பேருந்து நிலையம் அருகே போலீஸ் வாகனத்தை குறி வைத்து தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டு தாக்குதலைத் தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், 20 பேர் காயமடைந்துள்ளனர். 4 பொதுமக்கள், 10 காவல்துறையினர் மற்றும் 7 சிஆர்பிஎஃப் போலீசாரும் இதில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலையில் 11.45 மணியளவில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுப்பணித்துறை அமைச்சர் நயீம் அக்தர் அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வரவிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் தீவிரவாத தாக்குதலில் இருந்து அமைச்சர் தப்பியுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications