For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக விவசாயிகள் பிரச்சினை... மோடியிடம் மனு கொடுத்த தம்பித்துரை

தமிழக விவசாயிகள் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியிடம் தம்பிதுரை மனு அளித்துள்ளார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக விவசாயிகள் டெல்லியில் 15 நாட்களாக போரடி வருகின்றனர். விவசாயிகள் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தம்பிதுரை எம்பி மனு அளித்துள்ளார்.

நதிநீர் பிரச்சினை, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 15 நாட்களாக போரடி வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங், ராதாமோகன் சிங் ஆகியோரை சந்தித்து பேசினர்.

Thambidurai MP meets PM Modi

விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவிக்காதவரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தம்பித்துரை எம்.பி. இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.

நாடாளுமன்ற வளாத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். விவசாயிகள் பிரச்சினையும், அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
ADMK MP Thambi Durai met Prime Minister Modi Thambi Durai, who is known as a Sasikala loyalist met modi and gave a petition for farmers protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X