தானே அருகே 50 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 11 பேர் பலி
தானே: தானே அருகே 50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக மும்பையை அடுத்த தானேயில் கிருஷ்ணா நிவாஸ் என்ற இடத்தில் 3 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்தக் கட்டிடம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது.

ஏற்கனவே, இந்தக் கட்டிடத்தை இடிக்கப் போவதாகக் கூறி அதில் குடியிருந்தவர்களை வெளியேறச் சொல்லி தானே மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. இதனால், அக்கட்டிடத்தில் குடியிருந்தவர்களில் பாதி பேர் வெளியேறி விட்டனர். சில குடும்பங்கள் மட்டுமே அங்கு வசித்து வந்தன.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் அக்கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர்.
இந்த கட்டிட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி படு காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இவர்களில் நான்கு பேரது நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications