17 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோரைக் கண்டுபிடித்துக் கொடுத்த ‘கூகுள்’... தேங்க்ஸ் சொல்லும் மகள்!
பாட்னா: கூகுள் தேடல் மூலமாக சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தனது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்துள்ளார் அசாம் பெண் ஒருவர்.
நிஜவாழ்க்கையிலிருந்து தான் பெரும்பாலான சினிமாவிற்கான கதைக்கருக்கள் கிடைக்கின்றன. ஆனால், சில சமயங்களில் நிஜ வாழ்க்கையில் நடப்பவை சினிமாவையும் மிஞ்சி விடுவதுண்டு. அப்படித் தான் அசாமில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் பீகார், பரவ்னி ரயில் நிலையத்தில் ஆறு வயது குழந்தையாக இருந்த போது எதிர்பாராத விதமாக தனது குடும்பத்தைப் பிரிந்தார்.
கடந்த 1997ம் ஆண்டு தனது மாமாவுடன் குடியா என்ற சிறுமி தனது பாட்டியைக் காண ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது பரவ்னி ரயில் நிலையத்தில் சில பொருட்கள் வாங்குவதற்காக இறங்கிய குடியாவின் மாமாவால் மீண்டும் ரயிலைப் பிடிக்க முடியவில்லை.
மாமாவைக் காணாமல் அழுத குடியாவை ரயில்வே போலீசார் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். தனது பெற்றோரைப் பற்றி குடியாவால் தெளிவான தகவல்களைக் கூறாததால் அவரது பெற்றோரைப் போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.
பாட்னா ரயில்வே கிராஸிங்கிற்கு அருகே உள்ள பிஸ்கட் கம்பெனியில் அவரது மாமா வேலை பார்ப்பதாகவும், அதற்கு அருகிலேயே அவரது இல்லம் இருந்ததாகவும் மட்டும் குடியா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அசாம் அதிகாரி ஒருவர் வசம் சேர்ந்தார் குடியா. பின்னர் அங்கேயே வளர்ந்துள்ளார். குடியாவின் பெற்றோரைக் கண்டுபிடிப்பதில் நீலக்சி சர்மா என்ற அந்த அதிகாரி தீவிர முயற்சி எடுத்து வந்துள்ளார்.
எவ்வளவோ முறை நேரில் சென்றும் இந்த 17 ஆண்டுகளில் குடியாவின் வீட்டை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூகுளில் இது தொடர்பாக தேடுதல் வேட்டை நடத்தியுள்ளார் நீலக்சி. அப்போது அந்த பிஸ்கட் கம்பெனியின் தொலைபேசி எண் கிடைத்துள்ளது.
அதன் மூலம், குடியாவின் மாமாவைக் கண்டுபிடித்தார் நீலக்சி. பின்னர் அவர் மூலமாக குடியாவை அவரது குடும்பத்துடன் இணைத்து விட்டார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகளை மீண்டும் பார்த்த அவளது பெற்றோர், குடியாவை வாரி அணைத்துக் கொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் நீலக்சி.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications