அது கடைசி தாக்குதல் இல்லை.. தொடரும்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி சூசகமாக பேசிய பிரதமர் மோடி!
Recommended Video

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது கடைசி தாக்குதல் கிடையாது, இது போன்ற தாக்குதல்கள் தொடரும் என்று பிரதமர் மோடி சூசகமாக பேசி இருக்கிறார்.
அகமதாபாத்: பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது கடைசி தாக்குதல் கிடையாது, இது போன்ற தாக்குதல்கள் தொடரும் என்று பிரதமர் மோடி சூசகமாக பேசி இருக்கிறார்.
குஜராத்தில் நேற்று பாஜக சார்பாக தேர்தல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி குஜராத்தில் அகமதாபாத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பேசினார்.
இதில் அவர் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து நீண்ட நேரம் பேசினார். அதன்பின் காங்கிரஸ் குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

மோடி பேச்சு
பிரதமர் மோடி தனது பேச்சில், நாங்கள் கொஞ்சம் வித்தியாசமான அரசு. நாங்கள் ஒரு பணியை செய்து முடிப்போம். ஆனால் அந்த பணியை முடித்துவிட்டோம் என்று உறங்கிவிட மாட்டோம். நாங்கள் அடுத்த மிக முக்கியமான பணிக்கு தயாராகி விடுவோம்.

இன்னொரு பணி
நாங்கள் அப்படித்தான் இன்னொரு பணிக்கு தயாராகிக் கொண்டு இருக்கிறோம். நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்தோம். ஆனால் அது கடைசி நடவடிக்கை கிடையாது. தீவிரவாதிகள் பூமிக்கு அடியில் பதுங்கி இருந்தாலும் நாங்கள் தேடி சென்று தாக்குவோம்.

கொலை
தீவிரவாதிகளின் வீட்டின் கதவை தட்டி நாம் அவர்களை கொலை செய்ய வேண்டும். நாங்கள் கடுமையான, கசப்பான நடவடிக்கைகளை எடுக்க தயங்க மாட்டோம். எங்கள் நடவடிக்கைகள் எல்லாம் இனி மிக கடுமையாக இருக்கும்.

தேர்தல்
எதிர்க்கட்சியினர்தான் பாகிஸ்தானில் இப்போது ஹீரோ. அவர்கள்தான் அங்கு செய்தி தாள்களில் இடம்பிடிக்கிறார்கள். நாங்கள் இதை தேர்தலுக்காக செய்யவில்லை. இது தேர்தலுக்காக என்றால், முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் எதற்காக செய்யப்பட்டது. அப்போது தேர்தல் இல்லையே. நாங்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளோம், என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications