உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.. வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு தேர்தலில் சீட்.. அசத்திய பாஜக!
கொல்கத்தா: மேற்கு வங்கம் ஆஸ்கிராம் தொகுதியில் போட்டியிட வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்து அசத்தியுள்ளது பாஜக.
பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த கலிதா மஜி என்ற அந்த பெண், தனது வாழ்வாதாரத்திற்காக பல வீடுகளில் வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இதேபோல் பாங்குரா மாவட்டத்தில் உள்ள சால்டோரா சட்டமன்றத் தொகுதியில் தினசரி கூலித் தொழிலாளியின் மனைவி ஒருவருக்கு பாஜக சீட் கொடுத்துள்ளது.

வசதிமிக்க வேட்பாளர்கள்
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பது சாதாரண விஷயமல்ல. பெரும்பாலும் வாரிசுகள் என்ற அடிப்படையில் சீட் வழங்கப்படுகிறது. அதுவும் இல்லாவிட்டால் நன்கு பணம் படைத்தவர்களே தேர்தலில் போட்டியிட முடியும். பணம் இல்லாத எளிய வேட்பாளர்களை காண்பது மிக மிக அரிது. இப்படி ஒரு அரிய விஷயத்தை சாத்தியமாக்கி இருக்கிறது மேற்கு வங்க பாஜக.

வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு வாய்ப்பு
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இந்த முறை ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற முடிவில் களம் இறங்குகிறது. அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆஸ்கிராம் தொகுதியில் போட்டியிட வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்து அசத்தியுள்ளது பாஜக.

கணவர் பிளம்பர்
பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த கலிதா மஜி என்ற அந்த பெண், தனது வாழ்வாதாரத்திற்காக பல வீடுகளில் வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கலிதா மஜியின் கணவர் பிளம்பர் வேலை செய்கிறார். கணவனும், மனைவியும் ஒரு குடிசையில் வாழ்கின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் உள்ளூர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார்.

உழைப்பு மரியாதை
32 வயதான கலிதா மஜி 5 ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் 2018-ல் நடந்த பஞ்சாயத்து தேர்தலிலும் போட்டியிட்டார். பாஜக எப்போதும் திறமையையும் கடின உழைப்பையும் அங்கீகரிக்கிறது என்று பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்தார். இதேபோல் பாங்குரா மாவட்டத்தில் உள்ள சால்டோரா சட்டமன்றத் தொகுதியில் தினசரி கூலித் தொழிலாளியின் மனைவி ஒருவருக்கு பாஜக சீட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications