நெஞ்சு வலிக்குது! பாதி வழியில் எஸ்கேப்பான பலாத்கார குற்றவாளி! “அங்கேயே” குறிபார்த்து சுட்ட போலீசார்!
கவுகாத்தி : நெஞ்சுவலி என்று கூறியதால் சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கிய குற்றவாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது போலீசாரை தள்ளிவிட்டு ஓட முயன்றதால், அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்த மாநிலங்களுக்கு அடுத்தபடியாக ராஜாஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் மைனர் சிறுமிகளுக்கு வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றனர்.

கொடூர குற்றம்
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பினரால் மிகத் தீவிரமாக முன் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மிகக் கொடூர குற்றங்களை செய்யும் குற்றவாளிகளை என்கவுண்ட செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், போலீசார் குற்றவாளிகளை கொல்ல அனுமதிக்கக் கூடாது எனவும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் நெஞ்சுவலி என்று கூறியதால் சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கிய குற்றவாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது போலீசாரை தள்ளிவிட்டு ஓட முயன்றதால், அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அசாம் மாநிலத்தில் நாகோன் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவரை அந்த மாவட்ட போலீசார் புதன்கிழமை படத்ராவா காவல் நிலையப் பகுதியில் கைது செய்தனர்.

போலீசார் துப்பாக்கிச் சூடு
அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அன்று இரவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு செல்லும் வழியில், போலீசாரை தாக்கியதோடு அவர்களை தள்ளிவிட்டு காவல்துறையினரின் வாகனத்தில் இருந்து ஓடியுள்ளார். பலமுறை எச்சரித்த பின்னரும் அந்த நபர் நிற்காமல் ஓடியதால், போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்த நேரிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசாமில் என்கவுண்டர்
,முதுகு மற்றும் கால் பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில் தற்போது அந்த குற்றவாளி கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதவியேற்ற பிறகு போலீஸ் காவலில் இருந்து தப்பியோட முயன்றதாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 46 பேர் கொல்லப்பட்ட நிலையில், 110 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications