பெங்களூரில் கல்லூரி மாணவி 10 நாட்கள் தொடர் பலாத்காரம்.. லாட்ஜ் உரிமையாளரும் பங்கு போட்ட கொடுமை!
Recommended Video

பெங்களூர்: பெங்களூரில் 17 வயது கல்லூரி மாணவியை லாட்ஜ் அறையில் வைத்து பலாத்காரம் செய்த சம்பவத்தில் திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்துள்ளன.
பெங்களூர், ஒய்ட்பீல்டு பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவி, ஒய்ட்பீல்டு ரயில்வே நிலையம் அருகேயுள்ள 'கிளாசிக்கல் இன்' என்ற ஹோட்டல் லாட்ஜின் 6வது எண் அறையில் வைத்து 10 நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்டார்.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, அந்த பெண் மீட்கப்பட்டார்.

நால்வர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக ராகவேந்திரா (27), சாகர் (22), மஞ்சுராஜ் (32), மனோரஞ்சன் பண்டிட் (52) ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர். இதில் பண்டிட் அந்த ஹோட்டலின் உரிமையாளர். ராகவேந்திரா, சாகர் மற்றும் மஞ்சுராஜ் ஆகிய மூவரும், சம்பவம் நடந்த லாட்ஜ் அருகே டீ ஸ்டால் மற்றும் பால் பூத் வைத்துள்ளவர்களாகும்.

கடத்தி பலாத்காரம்
போலீசார் அந்த மாணவியிடம் சம்பவம் குறித்து விசாரித்தபோது, சக நண்பர் ஒருவர் அழைப்பதாக இவர்கள் மூவரும் அழைத்துச் சென்றதாகவும், பின்னர்தான் தான் கடத்தப்பட்டதை அறிந்ததாகவும், லாட்ஜில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

டீல் பேசிய காமுகர்கள்
அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் லாட்ஜ உரிமையாளர் பண்டிட்டுக்கு தெரியவந்துள்ளது. அவர் இதுகுறித்து போலீசில் கூறப்போவதாக மிரட்டியுள்ளார். ஆனால் அதற்கு பதிலாக இளம் பெண்ணை பலாத்காரம் செய்துகொள்ளுங்கள் என்று முக்கிய குற்றவாளி மூவரும் டீல் பேசியுள்ளனர். சபலப்பட்ட 52 வயது பண்டிட்டும், 17 வயது மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

10 நாட்கள்
லாட்ஜ் உரிமையாளருடன் சேர்ந்து மொத்தம் 4 பேரும், 10 நாட்களாக கல்லூரி மாணவியை தொடர்ந்து பலாத்காரம் செய்து தங்கள் காம வெறியை தீர்த்துள்ளனர். போலீசார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகள் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளனர்.

கல்லூரி செல்ல மறுப்பு
இதனிடையே சம்பவம் குறித்த வேதனையால், அந்த மாணவி கல்லூரி செல்வதை தவிர்த்துவிட்டாராம். அவர் கல்லூரி செல்ல விரும்பவில்லை என கூறும் மாணவியின் பெற்றோர், இதுதொடர்பாக பேச விரும்பவில்லை என கூறினர். மாணவி காணாமல் போனதாக பெற்றோர் புகார் கொடுத்த பிறகும் போலீசார் முதலில் மெத்தனம் காட்டினர். பெண்ணின் பெற்றோர் மூலம் நாளிதழில் அந்த செய்தி வெளியான பிறகு போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications