கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.. பிரதமர் மோடி உறுதி
இந்திய தேசத்தின் நலனுக்காக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது தொடரும் என்று பிரதமர் மோடி டெல்லியில் பேசியுள்ளார்.
Recommended Video

டெல்லி: இந்திய தேசத்தின் நலனுக்காக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது தொடரும் என்று பிரதமர் மோடி டெல்லியில் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நான்கு ஆண்டு ஆட்சியை முடித்துவிட்டு தற்போது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்குள்ளாகவே அடுத்த தேர்தலுக்கான ஏற்பாடுகளிலும் தீவிரமாக இறங்கி உள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மைய திறப்பு விழாவில் மோடி பேசினார். இதில் மோடி பேசிய சில விஷயங்கள் வைரலாகி உள்ளது.

அடிக்கல் நாட்டு விழா
டெல்லியில் நடந்த இந்த விழாவில் மோடி சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மைய திறப்பிற்கு அடிக்கல் நாட்டினார். இதில் வர்த்தகம் குறித்தும், முதலீடு குறித்தும் சந்தேகங்களை தீர்க்கும் கூடங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்தியா முழுக்க பல தொழில் முனைவோர்களுக்கு இதன் மூலம் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

என்ன பேசினார்
இதில் பேசிய பிரதமர் மோடி இந்திய தேசத்தின் நலனுக்காக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது தொடரும். மக்களின் நலனுக்காக எதையும் செய்ய தாயாராக இருக்கிறோம். எந்த ஒரு கடினமான முடிவையும் மேற்கொள்வதற்கு பாஜக அரசு தயங்கவே தயங்காது. மக்கள்தான் எங்களுக்கு முக்கியம் என்றுள்ளார்.

வேறு என்ன பேசினார்
மேலும் இந்த கண்காட்சி மையம் பெரிய அளவில் அமையும். இது சர்வதேச தரத்தில் இருக்கும். இதனால் இந்தியா வேகமாக வளரும். 2022ஆம் ஆண்டுக்குள், இந்திய பொருளாதாரம் பெரிய வளர்ச்சி அடையும். இந்திய பொருளாதாரம் அப்போது 5 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

மெட்ரோவில் சென்றார்
முன்னதாக பிரதமர் மோடி இந்த விழாவிற்கு மெட்ரோவில் சென்றார். அவர் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தார். இது பெரிய வரவேற்பை பெற்றது. இந்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications