சிலை உடைப்பு சம்பவங்கள்: அசம்பாவிதங்களை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தல்
சிலை உடைப்பு சம்பவங்கள் போன்ற அசம்பாவிதங்களை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி: சிலை உடைப்பு சம்பவங்கள் போன்ற அசம்பாவிதங்களை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
திரிபுராவில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் அங்கிருந்த லெனின் சிலைகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்பட்டது.
இதனால் இரு மாநிலங்களிலும் எதிர்ப்புகள் எழுந்தன. தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சிலை உடைப்பு சம்பவங்களை தடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

பதற்றமான சூழல்
ஆனாலும் கொல்கத்தாவில் சியாமா பிரசாத் முகர்ஜியின் சிலை உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

முறையாக பின்பற்றவேண்டும்
இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தாங்கள் ஏற்கனவே அறிவுறுத்தியதை மாநில அரசுகள் முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உன்னிப்பாக கவனிக்கிறது
சிலைகள் உடைக்கப்படும் சம்பவம் தொடர்பாக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையை மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர்கள், எஸ்பிக்கள் பொறுப்பு
சிலை இடிப்பு விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications