பிரணாப் வருகையால் மாற்றம்.. ஆர்எஸ்எஸ்ஸில் சேர்பவர்களின் எண்ணிக்கை 5 மடங்கு உயர்வு
ஆர்எஸ்எஸ் இயக்க கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி பேசியதை அடுத்து அந்த இயக்கத்தில் சேரும் நபர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி: ஆர்எஸ்எஸ் இயக்க கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி பேசியதை அடுத்து அந்த இயக்கத்தில் சேரும் நபர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழா சில வாரம் முன்பு நடந்தது. இதற்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசுத்தலைவருமான பிரணாப் முகர்ஜி சென்றிருந்தார். நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் பிறந்த இடத்தில் மரியாதை செலுத்தினார்.

பிரணாப்பிற்கு ஆர்எஸ்எஸ் அழைப்பு விடுக்கப்பட்ட போதே காங்கிரஸ் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.ஆர்எஸ்எஸ் இயக்கம் பல திட்டங்களை வைத்து அவருக்கு அழைப்பு விடுத்து இருந்ததாக கூறப்பட்டது. பிரணாப் முகர்ஜி அந்த கூட்டத்திற்கு சென்றதும், அங்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதும் இந்திய அரசியலிலேயே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு ஆதரவாக பிரணாப் பேசியதை அடுத்து அந்த இயக்கத்தில் சேரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. அதன்படி முன்பு இருந்ததை விட 5 மடங்கு பேர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்க்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது .
பிரணாப்பின் வருகைக்கு முன்பு ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தினமும் சராசரியாக சுமார் 378 பேர் இணைந்திருக்கிறார்கள். ஆனால் அந்த விழாவிற்கு இந்த எண்ணிக்கை 5 மடங்காக உயர்ந்துள்ளது. ஜூன் ஆறுக்கு பின் சரியாக தினமும் சராசரியாக 1200 முதல் 1700 அந்த இயக்கத்தில் இணைந்திருக்கிறார்கள்.
ஆனால் பிரணாப் வந்ததால்தான் அவர்கள் இணைந்தார்கள் என்ற கருத்தை ஆர்எஸ்எஸ் மறுத்துள்ளது. ஆனால் இன்னொரு தரப்பு அவர் வந்ததால் ஆர்எஸ்எஸ் மீதுள்ள பார்வை மாறியுள்ளதாக கூறியுள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications