இதுதான் மக்கள் மன நிலை.. பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.. நவீன் பட்நாயக் பளிச்

Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர்: 5 மாநில தேர்தல்களின் முடிவு பாரதீய ஜனதாவுக்கு எதிரான மக்கள் மனநிலையை காட்டுவதாக ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. அதே போல், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.

The Odisha Chief Minister Naveen patnaik congratulates to victory parties

இந்த வெற்றி குறித்து மற்ற மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு கருத்துகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பேசியதாவது: மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள், டிஆர்எஸ், எம்என்எஃப் கட்சி தலைவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

5 மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த நவீன் பட்நாயக், இந்த தேர்தல் முடிவுகள் மக்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. அப்படி பார்த்தால் தேசத்தின் முக்கிய பகுதி ஒடிசா என்றார்.

காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளிடம் இருந்து பிஜூ ஜனதா தளம் இடைவெளியை வைத்துள்ளது. சட்டீஸ்கரில் புதிய ஆட்சி அமைய உள்ள நிலையில், அவர்களின் மனநிலை மாறும் என நினைக்கிறேன். மகாநதி நீர் பங்கீடு விவகாரத்தில் விரைவில் சுமூக முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+