ஸ்ரீநகர், அவந்திபோரா விமான தளங்களை தாக்க தீவிரவாதிகள் சதி.. உளவுத்துறை எச்சரிக்கையால் பரபரப்பு
ஜம்மு: இந்தியாவில் உள்ள முக்கிய விமானப்படை தளங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழையும் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் புல்வாமாவில், சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் நுழைந்த இந்திய விமான படை தீவிரவாத முகாம்களை தாக்கியழித்தது. இதில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு பழிவாங்கும் விதமாக தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல அவந்திபோரா விமானப்படை தளத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், விமானப்படை தளத்திற்குள்ளும், அதனை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு உளவுத் துறை அறிவுறுத்தியுள்ளது .
உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமானப்படை தளங்களில் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது விானப்படை தளங்களை சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications