For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெடிகுண்டைவிட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை... வாக்களித்த பின் பிரதமர் மோடி பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    Narendra Modi cast his vote: தனது வாக்கை பதிவு செய்த மோடி

    அஹமதாபாத்: வெடிகுண்டைவிட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை என்றும், மக்கள் தங்கள் வாக்குகளின் வலிமையை உணர வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்த பின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் காந்தி நகரில் ஓட்டு போட வந்த பிரதமர் மோடி, முன்னதாக தனது தாயை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

     The weapon of terrorism is IED, the strength of democracy is voter ID. : says PM Narendra Modi

    அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தனது வாக்கினை பதிவு செய்ய அஹமதாபாத் வந்தனர் அங்கு ரெனிப் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு இருவரும் வந்து வாக்கினை பதிவு செய்தனர்.

    ராகுல், அமித்ஷா, முலாயம்சிங் யாதவ்... 3வது கட்ட தேர்தலின் நட்சத்திர நாயகர்கள் ராகுல், அமித்ஷா, முலாயம்சிங் யாதவ்... 3வது கட்ட தேர்தலின் நட்சத்திர நாயகர்கள்

    வாக்களித்த பின் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "இன்று காலை முதல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. எனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் எனது கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கும்பமேளாவில் நீராடி, புனித நீரால் தூய்மை அடைவது போல், ஜனநாயக திருவிழாவில் வாக்களித்த பின் தூய்மையானவராக உணருகிறேன்.

    பயங்கரவாதிகளுக்கு ஆயுதமாக வெடிகுண்டு உள்ளது. ஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை. வெடிகுண்டைவிட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். எனவே நீங்கள் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை உணருங்கள்" இவ்வாறு கூறினார்.

    English summary
    PM Narendra Modi after casting his vote in Ahmedabad says, " The weapon of terrorism is IED, the strength of democracy is voter ID."
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X