ஓடும் லாரியில் தாவிய கொள்ளையர்கள்.. மங்காத்தா படத்தை மிஞ்சும் திருட்டு சம்பவம்.. ஹைவேயில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

போபால்: மும்பை - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியில் பைக்கில் பின்தொடர்ந்து சென்று மங்காத்தா பட பாணியில் ஒரு கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வட்டமடித்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரிகளை குறிவைத்து சில திருட்டு கும்பல் வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. குறிப்பாக வட இந்தியா செல்லும் போது இத்தகைய திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக லாரி டிரைவர்கள் அடிக்கடி முன்வைக்கும் புகாராக உள்ளது.

Theives Steal Goods from Running Lorry on National Highway in Madhya Pradesh


வாகனங்களை வேண்டும் என்றே வந்து இடித்து விட்டு, அதிக பணம் கேட்டு அடாவடி செய்வது.. டிரைவர்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் வழிவிடாமல் வாகனங்களை ஓட்டி செல்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி டிரைவர்கள் அனுபிவிக்கும் இடையூறுகளை காட்டுவதாக அமைந்து இருக்கும்...

இந்த நிலையில் தான் தற்போது ஓடும் லாரியில் நடக்கும் துணிகர கொள்ளை சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அஜித் நடித்துள்ள மங்காத்தா படத்தில் டிரக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.... கிட்டத்தட்ட இதேபோலத்தான் ஓடும் லாரியை பின் தொடர்ந்து லாரியின் மேல் ஏறி கொள்ளையர்கள் கை வரிசை காட்டும் காட்சிகள் வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சினிமா சண்டை காட்சியை மிஞ்சும் சம்பவம்.. கார்களால் மோதி தாக்குதல்.. கர்நாடகவை அதிரவைத்த கேங் வார்


பைக்கில் லாரியை பின் தொடர்ந்து வரும் கொள்ளை கும்பலில் 2 பேர் திடீரென ஓடிக்கொண்டு இருக்கும் லாரியில் ஏறி... தார்ப்பாயை கிழித்து லாரியில் இருக்கும் மூட்டையை ரோட்டில் இழுத்து போடுகிறார்கள். அப்போது கொள்ளை கும்பலை சேர்ந்த மற்றொருவர் லாரியை பின் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறார்.

கூகுள் மேப் காட்டிய வழி.. ரோடுக்கு பதிலாக ஓடையில் பாய்ந்த கார்.. சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த கதி


லாரியின் மேலே ஏறிய கொள்ளையன் தனது வேலை முடிந்ததும்.. லாரியில் இருந்து அப்படியே பைக்கில் தாவிவிடுகிறான். உயிரை பணயம் வைத்து சினிமா பாணியில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ஷர்ஜாபூரில் ஆக்ரா - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், லாரியின் ஓட்டுநருக்கும் பைக்கில் வரும் கொள்ளையர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சில நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+