கூகுள் மேப் காட்டிய வழி.. ரோடுக்கு பதிலாக ஓடையில் பாய்ந்த கார்.. சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த கதி
திருவனந்தபுரம்: கேரளாவுக்கு சுற்றுலா வந்த ஐதராபாத்தை சேர்ந்த குடும்பத்தினர், கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி ஓடைக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓடைக்குள் விழுந்த கார் நீரில் அடித்து செல்லப்பட்டது. எனினும் தண்ணீரில் தத்தளித்தவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
பொதுபோக்குவரத்து இல்லாமல் சொந்த வாகனங்களில் புதிய ஊர்களுக்கு சென்றால் வழி தெரியாமல் பலரும் தடுமாறுவார்கள். முன்பெல்லாம் வழியில் வரும் மக்களிடம் கேட்டு, செல்ல வேண்டிய ஊருக்கு சரியான நேரத்தில் சென்று விடுவார்கள்.

இப்போது தொழில் நுட்ப உதவியால், கூகுள் மேப்ஸ்சை பயன்படுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை கூட யாரிடமும் வழி கேட்காமலே சென்று விட முடியும். மெட்ரோ நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை அனைத்து ஊர்களுக்கும் வழி சொல்லிவிடுகிறது இந்த கூகுள் மேப்ஸ்... இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி நினைத்த இடங்களுக்கு சென்று விட முடியும்..
ஆனாலும் கூட கூகுள் மேப்ஸ்சை அப்படியே நூல் பிடித்தால் போல செல்வது சில நேரம் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் கூகுள் மேப்சை சரியாக பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி நடந்து செல்லும் பாதையில் போய் கார் சிக்கிக் கொண்ட நிகழ்வுகளும் நடைபெற்று இருக்கின்றன.
இந்த நிலையில்தான், கேரளாவில் கூகுள் மேப்ஸ்சை பார்த்து காரை ஓட்டிசென்றதில் கார் சிற்றோடையில் சிக்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்ற்றிய விவரம் வருமாறு:- ஐதராபாத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட ஒரு குழு கேரளாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர்.
ஒரு பெண் உள்பட 4 பேரும் ஒரே காரில் ஒன்றாக வந்து கேரளாவின் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துள்ளனர். ஆலப்புழாவிற்கு காரில் சென்று போது வழி தெரியாததால் கூகுள் மேப்ஸ் போட்டுக்கொண்டு காரை ஓட்டியவர் சென்றுள்ளார். அப்போது கார் குருபந்தரா என்ற இடத்தில், சிற்றோடை ஒன்றில் நீர் நிரம்பி வழிந்து சாலையை மூழ்கடித்துள்ளது.
சாலைக்கும் சிற்றோடைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்துள்ளது. உள்ளூர் மக்களுக்கு இந்த விஷயம் தெரியும் என்பதால் அந்த சாலையை பயன்படுத்தாமல் இருந்து இருக்கிறார்கள். ஆனால், ஐதராபாத்தை சேர்ந்த சுற்றுலா குழுவினர் கூகுள் மேப்ஸ்சை பார்த்து நேராக சிற்றோடைக்குள் காரை விட்டனர். சாலை என்று நினைத்தவர்களுக்கு கார் மூழ்கிய பிறகே ஓடைக்குள் கார் பாய்ந்தது தெரியவந்து உள்ளது.
நீரில் மூழ்கி உயிருக்கு போராடியவர்களை உடனடியாக உள்ளூர் மக்களுடன் சேர்ந்து போலீசார் மீட்டனர். எனினும், அவர்கள் வந்த கார் நீரில் அடித்து செல்லப்பட்டது. காரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். கேரளாவில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது இது முதல் முறையல்ல..
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், கூகுள் மேப்பை பார்த்து சென்ற இரண்டு மருத்துவர்கள் ஆற்றுக்குள் காருடன் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மழைக்காலங்களில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செல்லும் போது கவனமுடன் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications