For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்பது கட்டாயமில்லை!! சர்ச்சை பற்றி சுஷ்மாஸ்வராஜ் விளக்கம் !!!

Google Oneindia Tamil News

டெல்லி : வரும் 21 ஆம் தேதி நடைபெறும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பது கட்டாயமில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி, மத்திய அரசு சார்பில் பெரியளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்தும், சர்ச்சைகள் பற்றியும் சுஷ்மா ஸ்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது....

sushma

யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்பது கட்டாயமில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் முழுவதும் 191 நாடுகளிலுள்ள 251 நகரங்களில், சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதற்கான ஏற்பாடுகள், இந்திய தூதரங்கள் வாயிலாக
செய்யப்பட்டுள்ளன. டெல்லி ராஜபாதையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 35,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யோகா தின கொண்டாட்டங்களில் யார் வேண்டுமானாலும பங்கேற்கலாம்.

இவ்வாறு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

English summary
There is no any restrictions in participation in Yoga day- Says External affairs minister Sushma Swaraj
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X