‛பெட்’ முழுதும் 500 ரூபாய் நோட்டு! திருடன் போட்ட இன்ஸ்டா ரீல்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்! என்னாச்சு
கான்பூர்: உத்தரபிரதேசத்தில் வீட்டோடு அமைந்திருக்கும் கோவிலின் பூட்டை உடைத்து லட்சக்கணக்கான பணத்தை திருடிய திருடன் வெளியிட்ட இன்ஸ்டா ரீல்ஸால் தற்போது போலீசில் சிக்கிய நிலையில் அதுகுறித்த சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் தருண் சர்மா. இவர் ஜோதிடராக உள்ளார். இவரது வீட்டையொட்டியே கோவில் ஒன்று உள்ளது. இரவில் தருண் சர்மா தனது வீட்டில் தூங்குவார். அதேபோல் கோவில் பணியாளர்கள் கோவிலில் தூங்குவார்கள்.

இந்நிலையில் தான் சமீபத்தில் கோவில் கதவை உடைத்து உண்டியலில் இருந்த லட்சக்கணக்கான பணம் திருடப்பட்டது. காலையில் கோவில் பணியாளர்கள் எழுந்து பார்த்தபோது தான் கதவு உடைக்கப்பட்டு திருட்டு நடந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமரா ஆய்வு செய்யப்பட்டது. அப்போது முகமூடி அணிந்து கோவிலுக்குள் நுழைந்த நபர் உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுபற்றி கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் சிசிடிவியில் பதிவான காட்சிகளும் போலீசாரிடம் வழங்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
சிசிடிவியில் பதிவான நபர் தனது முகத்தை முகமூடி கொண்டு மறைத்து இருந்தார். இதனால் அவர் யார்? என்பதை போலீசாரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதனால் இந்த திருட்டில் ஈடுபட்ட நபர் போலீசில் சிக்கவில்லை. வழக்கும் நிலுவையில் இருந்தது. இத்தகைய சூழலில் தான் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவியது.
அந்த வீடியோ என்பது ‛பெட்' முழுவதும் 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் கிடந்தன. அதோடு ஒருவர் கையில் 500 ரூபாய் கட்டை வைத்திருக்க ‛‛Money.. Money.. '' என வரும் பாடலுடன் ரீல்ஸ் வகையில் அந்த வீடியோ இருந்தது. மேலும் அந்த வீடியோ ஹோட்டல் அறையில் எடுக்கப்பட்டு இருப்பதும் உறுதியானது. இந்நிலையில் தான் போலீசாருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.
அதாவது உண்டியல் பணத்தை திருடிய நபர் தான் இப்படி இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவேற்றி இருக்கலாம் என நினைத்தனர். இதையடுத்து போலீசார் அந்த ரீல்ஸ் பதிவிட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி அவரை கண்டுபிடித்தனர். மேலும் பணம் எப்படி வந்தது? என்பது பற்றி விசாரித்தனர். இந்த விசாரணையின்போது அவர் கோவிலின் உண்டியலில் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி விசாரித்தபோது, ‛‛கை நிறைய பணம் இருக்கிறது. இதனை வைத்து இன்ஸ்டாவில் வீடியோ போட்டு அதிக லைக்ஸ்கள் பெற நினைத்தேன். இதனால் திருடிய பணத்தை வைத்து ரீல்ஸ் போட்டேன் மேலும் இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவர்கள் பற்றிய விசாரணை தீவிரமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications