3வது அணி கூட்டத்தில் பிஜூ ஜனதா தளம், அசாம் கனபரிஷத் 'ஆப்சென்ட்'
டெல்லி: காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள 3வது அணியின் நேற்றைய கூட்டத்தில் பிஜூ ஜனதா தளம் மற்றும் அசாம் கனபரிஷத் கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.
லோக்சபா தேர்தலுக்கு மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து 3வது அணியை இடதுசாரிகள் உருவாக்கியுள்ளனர். இந்த மூன்றாவது அணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இதில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடா, இடதுசாரித் தலைவர் பிரகாஷ் காரத், யெச்சூரி, பார்வார்டு பிளாக் தலைவர் பிஸ்வாஸ், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் நிதிஷ் குமார், சரத் யாதவ், அதிமுகவின் எம்.பி. தம்பிதுரை உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 3வது அணியின் பொதுசெயல் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நவீன், மகந்தா ஆப்சென்ட்
ஆனால் ஒடிஷா முதல்வரும் பிஜூ ஜனதா தளத்தின் தலைவருமான நவீன் பட்நாயக், அசாம் கன பரிஷத் தலைவர் பிரஃபுல்ல மகந்தா ஆகியோர் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் அந்த கட்சியின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

நவீன், மகந்தா 'லீவ்' சொன்னாங்க..
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் பங்கேற்கவில்லை. அசாம் கனபரிஷத்தின் தலைவர் பிரஃபுல் மகந்தாவின் அம்மாவின் உடல்நிலை சரியில்லாததால் வரவில்லை என்று பள்ளிக்கூட மாணவர்கள் 'லீவ்' சொல்லிவிட்டுப் போனதைப் போல விளக்கினார்.

பாஜகவும் காங்கிரசும் ஒன்றுதான்
தொடர்ந்து பேசிய காரத், காங்கிரஸ் கட்சியை ஒத்தக் கொள்கையை உடையதுதான் பாஜக, காங்கிரஸ் என்ற ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கம்தான் பாஜக. நாட்டுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகுப்புவாத அரசியல்களின் பிரதிநிதியாக பாஜக விளங்குகிறது என்றும் சாடினார்.

மதசார்பற்ற கட்சிகள்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் பாஜகவுக்கு மாற்றாகவே 11 கட்சிகள் கொண்ட இக்கூட்டணி அமையும் என்றும் காரத் குறிப்பிட்டார். மேலும், தங்களுடன் மதசார்பற்றக் கட்சிகள் இணையலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

15 கட்சிகள் அணியாகும்: முலாயம் சிங் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறும்போது, "இந்த மூன்றாவது மாற்று அணி மேலும் விரிவடையலாம். இன்று 11 கட்சிகள் உள்ள இந்த அணியில், பின்னாளில் 15 கட்சிகள் இடம்பெறக் கூடும்" என்றார்.

நிதிஷ்குமார்
மூன்றாவது அணி முயற்சி தோல்வியைத் தழுவினால், மீண்டும் பாஜகவுடன் இணைய வாய்ப்புள்ளதா என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரிடம் கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இப்பவே மூன்றாவது அணியா?
இதனிடையே ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய பிஜூ ஜனதா தள தலைவரும் அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக், மூன்றாவது அணி முயற்சி என்பது மிக முன்கூட்டியதான ஒன்றாக இருக்கிறது. இதை நான் முன்னமே கூறியிருக்கிறேன் என்றார்.

ஏன் வரலை- பிஜூ ஜனதா விளக்கம்
இதேபோல் 3வது அணி கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து கருத்து தெரிவித்த பிஜூ ஜனதா தள எம்.பி, பர்த்ருஹாரி மக்தப், காங்கிரஸ், பாஜகவிடம் இருந்து சமதூரத்தில் விலகி நிற்கவே நாங்கள் விரும்புகிறோம். இந்த சூழ்நிலையில் 3வது அணி குறித்து இன்னும் நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது என்றார்.

தேவகவுடாவுடன் மட்டும் சந்திப்பு
ஆனால் நேற்று காலை தேவகவுடாவின் வீட்டுக்கு தமது கட்சியின் மூத்த எம்.பி. ஒருவரை நவீன் பட்நாயக் அனுப்பி வைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதனால் தற்போதைய நிலையில் எந்த ஒரு அணியிலும் இடம்பெற வேண்டாம் என்றே பிஜூ ஜனதா தளம் முடிவெடுத்திருப்பதாகவே கருதப்படுகிறது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications