திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தேதியை இன்று அறிவிக்கவில்லை.. காரணம் தெரியுமா?
Recommended Video

டெல்லி: திருவாரூர் மட்டும் திருப்பரங்குன்றம் சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்படவில்லை.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர் ஏ.கே.போஸ். இவர் உடல் நலக் குறைவு காரணமாக ஆகஸ்டு 2-ஆம் தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளது. அங்கு அதிமுக, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திமுக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி உறுதியாகியுள்ளது.

திருவாரூர் தொகுதி
இதேபோல முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி மறைந்தார். இதையடுத்து அவர் எம்எல்ஏவாக பதவி வகித்து வந்த திருவாரூர் சட்டசபை தொகுதி காலியாக உள்ளது. அங்கும் மும்முனைப்போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான, மு.க.அழகிரியும் களம் காண கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதியம் பிரஸ் மீட்
ஒரு தொகுதி காலியானால், அதற்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை தொகுதிகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில்தான் இன்று மத்திய தேர்தல் ஆணையர் டெல்லியில் பகல் 3 மணியளவில் நிருபர்களை சந்திக்க உள்ளார் என்ற செய்தி காலை வெளியானது.

பெரும் எதிர்பார்ப்பு
மத்திய பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபை தேர்தல் குறித்து அப்போது அவர் அறிவிப்பு வெளியிட்டுவார் என்பதால் அப்போது திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்து.

இடைத் தேர்தல் தேதி இல்லை
ஆனால், பிற மாநிலங்களுக்கான சட்டசபை தொகுதி தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அறிவித்தாரே தவிர, திருவாரூர் மட்டும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை அவர் அறிவிக்கவில்லை.

காரணம் இதுதான்
இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது, தமிழகத்தில் புயல் சின்னம் உருவாகி, கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இன்று தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என்று தமிழக தலைமைச் செயலாளர் தனக்கு கடிதம் எழுதியதாகவும், எனவே, தேர்தல் தேதியை இன்று அறிவிக்காமல் மற்றொரு நாள் அறிவிக்க உள்ளதாகவும் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications