வெத்தலை போட்டுக்கிட்டு திண்ணையில் உக்காந்து பொறணி பேசும் பாட்டின்னு நினச்சியா.. மீனாட்சியம்மாடா!

Subscribe to Oneindia Tamil

வடகரா, கேரளா: கேரளாவைச் சேர்ந்த 76 வயது பாட்டி ஒருவர் களறிப்பயற்று கலையில் அதிரடியாக சுழன்றாடி இளைஞர்களுக்கு பெரும் சவால் விடுத்து வருகிறார்.

தனது வயதில் பாதி உடையவர்களிடம் கூட ஈடு கொடுத்து அசத்தி கம்பு சுற்றுகிறார் இந்தப் பாட்டி. அவரது பெயர் மீனாட்சியம்மா. கேரள மாநிலம் வடகராவைச் சேர்ந்தவர். தனது 10வது வயதிலிருந்து களறிப்பயற்று கலையில் அசத்தி வருகிறார் மீனாட்சியம்மா.

களறிப்பயற்றுக் கலையில் மாஸ்டராக திகழ்கிறார் மீனாட்சியம்மா. இவர் சோர்ந்து போய் உட்கார்ந்து யாருமே பார்த்ததில்லையாம். அப்படி ஒரு சுறுசுறுப்பு, விறுவிறுப்புடன்தான் எப்போதும் நடமாடுகிறார் மீனாட்சியம்மா.

இவர் ஒரு இளைஞருடன் கம்பு சுற்றி்ச் சண்டை போடும் காட்சி அடங்கிய வீடியோ வைரல் ஆகியுள்ளது. பாட்டியை விட பாதி வயதுடையவர் அந்த இளைஞர். அவருக்கு ஈடாக, சரிக்குச் சமமாக புயல் போல மீனாட்சியம்மா சுழன்றாடுவது பார்ப்போரை வியப்படைய வைக்கிறது. ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இந்த கம்புச் சண்டையில் ஈடுபடுகிறார் மீனாட்சியம்மா.

நீங்களும் பாருங்க.. சோம்பேறியா இருந்தா மாறுங்க.. பாட்டியைப் பார்த்து!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+