ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார் சுட்டுக்கொலை!
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டம் கர்பன் கிராமத்தில் இருந்து 4 போலீசாரை தீவிரவாதிகள் இன்று காலை கடத்தினர். அவர்கள் ஆன்லைனில் ராஜினாமா செய்வதாக அறிவிக்காவிட்டால் கொன்று விடுவோம் என மிரட்டும் வீடியோவை தீவிரவாதிகள் வெளியிட்டனர்.
இதைத்தொடர்ந்து மூன்று போலீசாரும் ஆன்லைனில் தங்கள் ராஜினாமாவை அறிவித்தனர். இதைத்தொடர்ந்து கடத்தப்பட்ட 3 போலீசாரையும் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

குண்டுகள் துளைத்த காயங்கள்
அவர்களின் உடம்பில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயங்கள் இருந்தன என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகசிய தகவல்
முன்னதாக இன்று அதிகாலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை, பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர்.

ராணுவத்தினர் பதிலடி
இதையறிந்த தீவிரவாதிகள், ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு, ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.

பலத்த பாதுகாப்பு
பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications