ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற மும்பை இளைஞர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
மும்பை: மும்பையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்திருக்க கூடும் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களை பிடிக்க மத்திய புலனாய்வு துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் அச்சுருத்தலாக செயல்பட்டு வருகிறது ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பு. ஈரான், சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். அமைப்பை முழுவதுமாக அழிக்க அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப்படைகள் தீவிரமாக தாக்குதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் ராஜஸ்தானில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளராக இருந்த சிராஜூதீன் என்ற கர்நாடாகாவைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்க்கும் வேலையை சிராஜூதீன் செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில்,மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான மால்வானியைச் சேர்ந்த ஆயாஸ் சுல்தானை (23) கடந்த அக்டோபர் 30-ம் தேதி முதல் காணவில்லை. அதே பகுதியைச் சேர்ந்த மொஹ்சின் ஷேக் (26), வாஜித் ஷேக் (25) ஆகிய இருவரும் கடந்த 16-ம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டனர். வெவ்வேறு காரணங்களை கூறி வெளியே சென்றவர்கள் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் ஒரே பகுதியைச் சேர்ந்த இந்த மூன்று பேரும் ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் நோக்கத்துடன் வீட்டைவிட்டு சென்று இருக்க கூடும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்களின் கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்த மும்பை போலீசார் அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்களை பிடிக்க மத்திய புலனாய்வு துறையின் உதவியையும் நாடியுள்ளனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications