கல்லூரிக்குள் புகுந்த புலி: பிடிப்பதற்குள் படாதபாடு பட்ட வனத்துறையினர்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பொறியியல் கல்லூரிக்குள் புலி ஒன்று புகுந்ததால் மாணவர்களும், ஆசிரியர்களும் பயத்தில் உறைந்தனர்.
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ளது சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்ச்சுரல் என்ஜினியரிங் கல்லூரி. வியாழக்கிழமை கல்லூரி வளாகத்திற்குள் புலி ஒன்று புகுந்தது. வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின்மேல் புலி அமர்ந்திருந்ததை பார்த்த மாணவர்களும், ஆசிரியர்களும் பயத்தில் உறைந்தனர்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாரும் வகுப்பறைகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. உடனே இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்தவுடன் வனத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு வந்து புலியை மயக்க ஊசி போட்டு பிடிப்பதற்கு படாதபாடுபட்டனர். பின்னர் ஒருவழியாக அவர்கள் புலியை பிடித்துச் சென்று வான் விஹார் விலங்கியல் பூங்காவில் விட்டனர்.
அங்கு 24 மணிநேர கண்காணிப்புக்கு பிறகு புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications