பதன்கோட் அட்டாக்... நாட்டை உலுக்கிய பஞ்சாப் தாக்குதலின் பரபரப்பு நிமிடங்கள்!
பதன்கோட், பஞ்சாப்: பஞ்சாப் மாநில எல்லையான பதன்கோட்டில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 7 இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த தாக்குதல் எப்படி ஆரம்பித்தது, ஒவ்வொரு மணித்துளியிலும் என்ன நடைபெற்றது என்பது இங்கே விளக்கமாக தரப்பட்டுள்ளது.

டிசம்பர் 30, 2015: ஜெய்ஸ்-இ-முகமதினைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் பஞ்சாப்பின் கதுவா-குர்டாஸ்பூர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவினர்.
ஜனவரி 1, 2016: இரவு 8 மணியளவில் பாகிஸ்தான் எண் பொறிக்கப்பட்ட டாக்சி ஒன்றினை வாடகைக்கு பிடித்தனர். அந்த டாக்சி டிரைவரை தொண்டைக் குழியில் குத்திக் கொலை செய்துள்ளனர்.
9.30 மணிக்கு குர்டாஸ்பூர் காவல் ஆணையர் சல்விந்தர் சிங்கினை கடத்தியுள்ளனர். அவருடைய காரையும் திருடிச் சென்றுள்ளனர்.
அவருடைய செல்போனைப் பயன்படுத்தி பவல்பூர், பாகிஸ்தானுக்கு தொடர்பு கொண்டனர்.
ஜனவரி 2, 2016: பதன்கோட் ஏர் போர்ஸ் தளத்தினை தீவிரவாதிகள் முற்றுகையிட்டனர். மதியம் 3 மணியளவில் ஏர் போர்ஸ் தளத்திற்குள் நுழைய முயன்ற தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மதியம் 3.30 மணியளவில் மேலும் 5 தீவிரவாதிகள் ஏர் போர்ஸ் தளத்திற்குள் சுட்டுக் கொண்டே நுழைந்தனர். ராணுவ வீரர்கள் உடனடியாக பதன்கோட் விரைந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இரண்டு ஐ.எப்.ஏ வீரர்களும், ஒரு கருடா கமாண்டோ வீரரும் உயிரிழந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதில் பல பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.
இதனையடுத்து ராணுவத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் 3 முதன்மை பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். மாலை 6 மணியளவில் துப்பாக்கிச் சூடு நிறைவடைந்தாலும், தேடுதல் வேட்டை தொடர்ந்தது.
ஜனவரி 3, 2016: படுகாயமடைந்த மேலும் 4 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்ததால் பாதுகாப்பு படை வீரர்களின் இறப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மதியம் 12.30 மணியளவில் மேலும் 2 தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவரும் சுட்டு வீழ்த்தப்படுகிறார்.
5 மணியளவில் உள்துறை செயலாளர் திடீர் தாக்குதலால் படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தாக்குதல் நிறைவடையும் நிலையை எட்டியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உடனடி அவசர ஆலோசனைக்கு பிரதமர் வேண்டுகோள் விடுக்கிறார். தேடுதல் வேட்டை தொடர்கிறது.
ஜனவரி 4, 2016: மிஞ்சி இருக்கும் ஒரு தீவிரவாதியை கொல்வதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் போராடுகின்றனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்கிறது. ஒவ்வொரு தீவிரவாதியும் 6 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிபொருளுடன் வந்ததாக பாதுகாப்பு வீரர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் முடிவடையும் தருவாயில் தாக்குதல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications