திரிபுராவில் பாஜகவின் ஆட்டம் காட்டிய தேபர்மா.. இடதுசாரிகளை திகைக்க வைத்த வெற்றி
அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில் பாஜக கூட்டணி 32 இடங்களில் வென்றுள்ளது. டிஎம்பி கட்சி 13 இடங்களில் வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களில் வென்று 3வது இடத்தையே பிடித்தது. ஐபிஎப்டி கட்சி ஒரு இடத்தில் வென்றது.
திரிபுராவில் வாக்குப்பதிவு நடந்த மொத்தம் உள்ள 60 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் காலையில் இருந்து வெளிவர தொடங்கியது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி 45 இடங்களில் வெல்லும் என்றும், டிஎம்பி கட்சி இரண்டாவது இடத்தையும், இடதுசாரிகள் மூன்றாவது இடத்தையும் தான் பிடிப்பார்கள் என கூறப்பட்டது. ஆனால் நிலவரம் அதிரடியாக மாறி இருந்தது.
திரிபுரா சட்டப்பேரவையில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இங்கு 25 ஆண்டுகளாக சி.பி.எம் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவந்தது. கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காதவிதமாக பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றது. வெறும் 5 சதவீதம் மட்டுமே வாக்கு வங்கி வைத்திருந்த பாஜகவில், காங்கிரஸ் கட்சியினர் மொத்தமாக பாஜகவில் இணைந்ததால் அதிரடியாக பாஜக மிகப்பெரிய பலம் வாய்ந்த கட்சியாக மாறியது இதனால் அப்போது மொத்தமிருக்கும் 60 தொகுதிகளுக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க 51 இடங்களிலும், ஐ.பி.எஃப்.டி 9 இடங்களிலும் போட்டியிட்டன.

பழங்குடியினர்
இடது முன்னணிக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஃபார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தலா ஓர் இடத்திலும் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி 59 இடங்களில் தனித்துப்போட்டியிட்டது. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராதவிதமாக பா.ஜ.க 36 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் 18 தொகுதிகள் பழங்குடியினரின் தொகுதிகள் ஆகும்.

எப்படி இருந்தது
2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. எனினும், வாக்கு வித்தியாசம் பாஜக கூட்டணிக்கும் இடது முன்னணி கூட்டணிக்கும் இடையேயான பெரிய அளவில் இல்லை. இந்த இரு கூட்டணிகளுக்குமிடையே 5 தொகுதிகளில் 1,000 வாக்குகளுக்கும் குறைவாகவும், 29 தொகுதிகளில் 5,000 வாக்குகளுக்கும் குறைவாகவே வாக்கு வித்தியாசம் இருந்தது.

களம் இறங்கின
தனது கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணியுடன் (ஐ.பி.எஃப்.டி) இணைந்து பாஜக கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது. திரிபுராவில் மாணிக் சகா பாஜக சார்பில் முதல்வராக உள்ளார். இந்நிலையில் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க 55 தொகுதிகளிலும், ஐ.பி.எஃப்.டி 5 தொகுதிகளிலும் களம் இறங்கின. இடது முன்னணி-காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ராம் நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு இடது முன்னணி தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. இது தவிர மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் இந்த தேர்தலில் களம் இறங்கியது. திப்ரா மோத்தா பார்டி (டிஎம்பி) தனித்தும் களம் இறங்கியது.

கணிப்புகள்
திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 16-ந் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டது.

திப்ரா மோத்தா
அதன்படியே திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 29 இடங்களில் வென்றுள்ளது. 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இடதுசாரிகள் 9 இடங்களில் வென்று 2இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள். டிஎம்பி கட்சி 12 இடங்களில் வென்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் இரண்டு இடங்களில் வென்று 1 இடத்தில் முனனிலை வகிக்கிறது. 31 இடங்களில் வென்றால் தான் ஆட்சியை பிடிக்க முடியும் என்கிற நிலையில், பாஜக 32 இடங்களில் வெல்லும் என்று தெரிகிறது. எனவே ஆட்சியமைப்பதில் பாஜகவிற்கு சிக்கல் இருக்காது.

திப்ரா மோத்தா
முன்னதாக தேர்தலில் திப்ரா மோத்தா பார்டி (டிஎம்பி) ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது ஏனெனில் திப்ரா மோத்தா பார்டி 13 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலை வகிக்கிறது. ஒருவேளை பாஜகவால் மெஜாரிட்டி இடங்களில் வெல்ல முடியாமல் போனால் திப்ரோமோத்தா கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அவர்களே ஆட்சி அமைப்பார்கள் என்ற நிலை ஏற்படும் என்ற நிலை இருந்தது. 2021 பழங்குடியினர் அதிகம் உள்ள மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது இந்த கட்சி தான் .

திப்ராமோத்தா
அதன்படியே திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 32 இடங்களில் வென்றுள்ளது. . இடதுசாரிகள் 11 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள். டிஎம்பி கட்சி 13 இடங்களில் வென்றுள்ளது.காங்கிரஸ் 3 இடங்களில் வென்றுள்ளது. 31 இடங்களில் வென்றால் தான் ஆட்சியை பிடிக்க முடியும் என்கிற நிலையில், பாஜக 32 இடங்களில் வென்றுள்ளதால் ஆட்சியமைப்பதில் பாஜகவிற்கு சிக்கல் இருக்காது.

திப்ரா மோத்தா
முன்னதாக தேர்தலில் திப்ரா மோத்தா பார்டி (டிஎம்பி) ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது ஏனெனில் திப்ரா மோத்தா பார்டி 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒருவேளை பாஜகவால் மெஜாரிட்டி இடங்களில் வெல்ல முடியாமல் போனால் திப்ரோமோத்தா கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அவர்களே ஆட்சி அமைப்பார்கள் என்ற நிலை ஏற்படும் என்ற நிலை இருந்தது. ஆனால் அப்படியான ஒரு நிலை ஏற்படவில்லை. 2021 பழங்குடியினர் அதிகம் உள்ள மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது டிஎம்பி கட்சி தான் .

மன்னர் பரம்பரை
மாநிலக் கட்சியான திப்ரா மோத்தா 42 தொகுதிகளில் போட்டியிட்டது. பூா்வகுடி மக்களுக்காக 'திப்ராலாந்து' என்ற மாநிலத்தை உருவாக்கும் கோஷத்துடன், இக்கட்சி களம் இறங்கியது. திரிபுராவில் பழங்குடியின தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தோ்தல்களில் திப்ரா மோத்தா ஏற்கெனவே சிறப்பாக செயல்பட்டமையால், அக்கட்சி மீதான எதிா்பாா்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது. கடந்த 2018 தோ்தலில் பழங்குடியினா் பகுதியில் உள்ள 20 தொகுதிகளில் 18-இல் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், இம்முறை திப்ரா மோத்தாவின் வரவுதான், பாஜகவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியது. பிரத்யோத் கிஷோர் மாணிக்ய தேபர்மா என்பவர் தான் திப்ரா மோத்தா பார்டியின் தலைவர் ஆவார். இவரது மூதாதையர்கள் தான் திரிபுராவை ஆண்டவர்கள் ஆவார். மன்னர் பரம்பரையைச் சேர்ந்த பிரத்யோத் கிஷோர் மாணிக்ய தேபர்மாவின் வரவு பாஜகவிற்கு கடும் சவாலை தந்திருக்கிறது. இடதுசாரிகளையும் திப்ரா மோத்தா கட்சி மிரள வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications