திருப்பதி கோவிலில் ஏணிப் படிக்கட்டு சரிந்து விழுந்து விபத்து: 10 பேர் படுகாயம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏணிப் படிக்கட்டு சரிந்து விழுந்ததில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஏகாதேசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முதலாவதாக அதிகாலை 3 மணிவரை முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கபட்டனர். இதையடுத்து, பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கபட்டனர். இந்த சொர்க்க வாசல் வாயிலாக செல்வதற்காக பக்தர்கள் நேற்று மாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

சொர்க்கவாசல் திறப்பை தொடர்ந்து தங்கரத வீதி உலாவை காண்பதற்காக அங்கிருந்த பக்தர்கள் சிலர் சாமியை ஏற்றுவதற்காக பயன்படுத்தப்படும் ஏணிப் படிகட்டுகளில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பளு தாங்க முடியாமல் ஏணிப்படிகட்டு பக்தர்கள் மீது சரிந்தது. இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேவஸ்தானத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications