பிராமணர் அல்லாதவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி- திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!
திருப்பதி: பிராமணர் அல்லாதோருக்கும் அர்சக்கர் பயிற்சி அளிக்க திருப்ப்தி தேவஸ்தானம் அதிரடி முடிவு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி வேத பாடங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வேத பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் மூலம் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பழங்குடியினத்தவர்களுக்கு குறுகிய காலமாக 3 மாதத்தில் வேத பாடங்கள் கற்று தரும் திட்டமும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதனை தற்போது தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் என விரிவாக்கம் செய்து, முழு நேர பாடத்திட்டத்தில் கற்றுத் தர உள்ளனர்.
இது குறித்து ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாணிக்கியால வரபிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு அறநிலையத்துறை மற்றும் திருப்பதி தேவஸ்தானம் இணைந்து அர்ச்சகர் பணிக்காக வேத பாடசாலையில் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். ஆந்திர மாநிலத்தில், கோயில் இல்லாத ஊர்களில் கோயில்கள் கட்டி, பயிற்சி முடித்த இளைஞர்களை அர்ச்சகர்களாக பணியில் அமர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அரசு சார்பில் வேத ஆகம பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆனாலும் இன்னமும் இது நடைமுறைக்கு வராத அளவுக்கு முட்டுக்கட்டைகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications