For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2019 தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கிடைக்கும்.. மமதா எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கிடைக்கும் - மமதா பானர்ஜி

    கொல்கத்தா: 2019 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கிடைக்கும். மத்தியில் ஆட்சியிலிருந்து பாஜக தூக்கி எறியப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

    1993ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 காங்கிரஸ் தொண்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் நினைவு தினம் இன்று கொல்கத்தாவில் அனுசரிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு மமதா பேசியபோது இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

    TMC warns BJP of massive defeat in 2019 polls

    மமதாவின் பேச்சிலிருந்து:

    2019 தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கிடைக்கும். 100 இடங்களுக்கும் குறைவாகவே பாஜக வெல்லும். இதற்கு மேற்கு வங்கம் வழி காட்டும்.. மேற்கு வங்கத்தில் உள்ள 42 லோக்சபா தொகுதிகளிலும் திரினமூல் காங்கிரஸ் வெற்றி பெறும். பாஜகவுக்கு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் மிகப் பெரிய அடி கிடைக்கும்.

    நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வென்றதை வைத்து பாஜகவின் செல்வாக்கு உயர்ந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பாஜக முயல்கிறது. அதை நான் முறியடிப்பேன். நாடாளுமன்றத்திற்குள் நடந்த நிகழ்வு அது. வெளியில் ஜனநாயகம்தான் வெல்ல முடியும். அவர்களால் வெல்ல முடியாது.

    அதிமுக மிகத் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டது. இதற்கான விலையை அது கொடுத்தாக வேண்டும். 2024 குறித்துப் பாஜகவினர் பேசுகிறார்கள். முதலில் 2019ஐ கடக்கிறார்களா என பாருங்கள்.

    முதலில் சரியான பந்தலைப் போட கற்றுக் கொள்ளுங்கள். சரியாத பந்தலே போட முடியாதவர்கள் நாட்டை கட்டியமைக்கப் போகிறார்களா. (மோடி நிகழ்ச்சியில் பந்தல் சரிந்ததை சுட்டிக் காட்டுகிறார்)

    ஆகஸ்ட் 15ம் தேதி பாஜகவை அகற்றுவோம் நாட்டைக் காப்போம் என்ற பிரசாரம் கொல்கத்தாவில் தொடங்கப்படும். 2019ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்படும். அதில் அகில இந்தியத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். மேற்கு வங்கம் தயாராகி விட்டதை அது உணர்த்தும் என்றார் மமதா பானர்ஜி.

    English summary
    TMC leader and WB Chief Minister Mamata Banerjee has warned BJP of massive defeat in 2019 polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X